ஏழாம் அறிவும் மாஸ் என்டர்டெயினரும் கிடையாது
வந்ததே வந்துட்டீங்க பதிவுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு பஞ்ச் டயலாக் கேட்டுக்குங்க
"கலைஞானி கமல் நடித்திராவிட்டாலும் கூட ஏழாம் அறிவு படத்தில் அவர் நடித்து இருப்பது போல் யாரெல்லாம் ஃபீல் பண்ணுகிறார்களோ அவர்களே உண்மையான கமல் ரசிகர்கள்"
வழக்கம் போல் அலுவலகத்தில் ஆணி புடுங்கிக் கொண்டிருந்த போது செல்போன் சினுங்கியது. அழைத்தது தங்கமணி "எப்போ ஆபிஸ்ல இருந்து கெளம்புறீங்க?". தங்கமணி இப்படி கேட்டால் "வீட்டுக்கு கெளம்பாம ஆபிஸ்ல இன்னும் என்னத்த கழட்டிட்டு இருக்கீங்க" என்று அர்த்தம். அன்று மாலை ஏதும் வேலை இருப்பதாக முன்கூட்டியே சொல்லாததால் என்ன விஷயம் என்று வினவினேன். அதற்கு தங்கமணி சீக்கிரம் வர முடிந்தால் ஏழாம் அறிவு படத்துக்கு போகலாம் என்றார். அதற்கு நான் சுதாரித்துக் கொண்டு எப்போதும் விஜய் படம் தானே வந்தவுடனேயே பார்க்கனும் என்று சொல்லுவ இப்போ என்ன புதுசா ஏழாம் அறிவு படத்துக்கு கூப்பிடுற. வேணா நாம விஜய் படத்துக்கே போகலாம் என்று அக்கறையா கேட்பது போல் கேட்டேன். உண்மையில் ஏழாம் அறிவு படத்தைவிட விஜய் படத்துக்கு டிக்கெடி விலை கம்மி என்பது தான் காரணம். என் எண்ண ஓட்டத்தை வாய்ஸ் மாடுலேஷனிலேயே மோப்பம் பிடித்த தங்கமணி உங்க அக்கறையை எல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி வைத்துவிட்டு ஏழாம் அறிவு படத்துக்கு டிக்கெட் எடுக்கிற வழியப் பாருங்க என்று அன்புக் கட்டளை இட்டார்
ஏழாம் அறிவு படத்துக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு டிக்கெட் கிடைக்காதாம் என்று அடுத்த பிட்டை போட்டுப் பார்த்தேன். டிக்கெட் எல்லாம் கிடைக்குதாம் நம்ம அப்பார்ட்மென்ட்டில் இருந்து கூட நிறைய பேர் போறாங்களாம் என்றார். ஆகா அபார்ட்மென்ட்டில் தான் யாரோ கெளப்பிவிட்டுட்டு போயிட்டாங்களா அப்போ எஸ்கேப் ஆகுறது ரொம்ப கஷ்டம் என்று முடிவு செய்து கொண்டேன். சரி, எப்போ வர்றீங்க என்று ஆரம்பித்த இடத்துக்கே வந்தார். இரு நான் கிரகங்களின் நிலமையை பார்த்து தான் சொல்லனும் என்றேன். என்னது கிரகமா? நீங்க எப்போது இருந்து ஜோதிடம் பார்க்க ஆரம்பிச்சீங்க என்றார். அதாவது பிராஜெக்ட் மேனேஜர், பிராஜெக்ட் லீட் ஆகியோர் என்னை தேடி வருவார்களா என்று பார்த்துவிட்டு மற்றும் நம் டீம் மெம்பர்களின் ஸ்டேட்டஸையும் பார்த்துவிட்டு தான் சொல்ல முடியும் என்றேன். சரி சரி சீக்கிரம் வர்ற வழியப் பாருங்க என்று சொல்லிவிட்டு போன் காலை கட் செய்தார்
ஒரு வழியாக ஏழாம் அறிவு படமும் பார்த்தாகிவிட்டது. படத்தில் நம்ம டைரக்டர் முருகதாஸ் அவர்கள் சொல்ல வருவது மேலே சொன்ன மாதிரி தான். நம்மில் பலர் சில விஷயங்களை நம்பிக்கையோடு அனுகுகிறார்கள், அத்தகையவர்கள் அந்த விஷயங்களை கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள். ஆனால் அதே விஷயங்களை வேறு சிலர் மூடநம்பிக்கை என்ற கண்ணோட்டத்தோடு அனுகுகிறார்கள். இவர்கள் அவ்விஷயங்களை கண்மூடித்தனமாக நிராகரிக்கிறார்கள். நம்ம இயக்குநர் இந்த இரண்டுமே தவறு
எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். எல்லாம் ஓகே தான் ஆனால் இயக்குநர் தான் சொல்ல வந்ததை இப்படி சிம்பிளாக சொன்னால் தமிழர்களாகிய நம் மக்கள் அதை ஏற்றுக் கொள்வதற்கு கொஞ்சம் யோசிக்கவே செய்வார்கள். இந்த விஷய்த்தில் இயக்குநர் ஷங்கரை முருகதாஸ் அவர்கள் பின்பற்ற வெண்டும். அந்நியன் படம் கூட டாகுமெண்டரி டைப் படம் தான். ஆனால் இயக்குநர் ஷங்கர் "சேர்க்க வேண்டியதை" சேர்த்ததால் தான் படம் பிய்த்துக் கொண்டு ஓடியது. யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை , கேட்கவும் முடியாது?
மற்றபடி படத்தில் லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன என்று சொல்வதெல்லாம் சுத்த பேத்தல். இதே இயக்குநர் எடுத்த கஜினி படத்தில் இல்லாத லாஜிக் ஓட்டைகளா. ஆனால் அந்த படத்தை நம் ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து ஓட வைக்கவில்லையா? அதே மாதிரி இன்னும் என்னென்னவோ சம்மந்தா சம்மந்தமே இல்லாமல் குறை சொல்கிறார்கள். போதி தர்மர் தமிழரா இல்லையா என்று கேள்வி எழுப்புகிறார்கள். என்னவோ தமிழன் இதற்கு முன் எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து அறிந்து ஏற்றுக் கொண்ட மாதிரியும், இப்போது தான் அவன் மீது ஏதோ ஒன்று முதன்முறையாக திணிக்கப்படுவது மாதிரியும் ஒரு பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார்கள். மேலும் படத்தில் சூர்யாவும், ஸ்ருதியும் அரை குறை ஆடைகளோடு வருகிறார்களாம். என்னை பொறுத்தவரை இந்த படத்தில் மிக நெருக்கமான காதல் காட்சிகளை கூட வைக்காமல் எடுத்து இருக்கிறார் இயக்குநர். இன்றைய காலகட்டத்தில் இப்படி எல்லாம் கூட படம் எடுக்க முடியும் என்று நிரூபித்த டைரக்டருக்கு சிலை வைத்தால் கூட தவறில்லை
மேலும் இயக்குநர் முருகதாஸ் அவர்கள் ஓவர் பில்டப் கொடுத்துவிட்டார் என்றும் கூட சொல்கிறார்கள். நாம் இப்போது முழுக்க முழுக்க வியாபாரமயமாகிவிட்ட காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், இங்கே கூவாத பொருள் சந்தையில் விற்பனை ஆகாது என்று எங்கள் பிராண்டிங் குரு அடிக்கடி சொல்லுவார். இப்படித் தான் ஒரு பெரிய்ய்ய நடிகரின் படம் ஒன்று ரிலீஸாகவிருந்தது. அந்த நடிகர் தொலைக்காட்சியில் தோன்றி தன் படம் தான் தமிழில் வெளிவரும் முதல் ஜேம்ஸ்பாண்டு படம் என்று அள்ளிவிட்டார். அந்த படம் எப்படி இருந்தது என்று உங்களுக்கே தெரியும் அந்த நடிகரே கூட அந்த படத்தை பார்த்து டென்ஷன் ஆகி தன் ரசிகர்களை பார்த்து சவுண்டுவிட்டார். அடுத்து இன்னொரு நடிகரின் படம் வெளிவரும் நேரத்தில் அந்த நடிகர் தொலைக்காட்சியில் வந்து இது குழந்தைகளுக்கான படம் என்று சொன்னார், அந்த படப் பாடல்கள் எப்போதும் மிட்நைட் மசாலாவில் தவறாமல் இடம் பெறும். இதையெல்லாம் கம்பேர் பண்ணும் போது நம்ம இயக்குநர் முருகதாஸ் அவர்கள் எவ்வளோ தேவலாம்
படத்தை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தியேட்டரை விட்டு வெளிவந்தும் கூட மனதை விட்டு அகல மறுக்கும் சீரியஸ் படமும் கிடையாது திரையில் வணக்கம் போடும் முன்னரே வண்டியை எங்கே பார்க் பண்ணினோம் என்று மறக்கக் கூடிய மாஸ் என்டர்டெயினரும் கிடையாது
5 comments:
//"கலைஞானி கமல் நடித்திராவிட்டாலும் கூட ஏழாம் அறிவு படத்தில் அவர் நடித்து இருப்பது போல் யாரெல்லாம் ஃபீல் பண்ணுகிறார்களோ அவர்களே உண்மையான கமல் ரசிகர்கள்"//
தல கொஞ்சம் இடிக்குதே உங்க பஞ்ச் - கலைஞானி நடித்து இருப்பது போல் பீல் பண்ணவில்லை ஏன்னா சூர்யா அந்த இடத்துக்கு வரமுடியாது.
பட் இது அப்படியே தசாவதாரம் படம் ஞாபகம் வந்துச்சி...;-)
தல நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க
படத்தில் முதல் இருபது நிமிடங்கள் ஐந்தாம் நூற்றண்டினை காட்டிவிட்டு பின்னர் சமகாலத்துக்கு மாறுவது என்ற தசாவதார உத்தியை திரைக்கதையில் கையாண்டிருப்பது, மற்றும் அந்த bio war என்று தசாவதார நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை தான்
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ருதிஹாசன் நடித்து இருந்தை வைத்து தான் நான் அவ்வாறு சொன்னேன்
\\ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ருதிஹாசன் நடித்து இருந்தை வைத்து தான் நான் அவ்வாறு சொன்னேன்\\
ஒஒ..ரைட்டு..;-))
ஆனா தல எனக்கு என்னாமே தலைவரு தனியாக ரூம் போட்டு அழுவாருன்னு தோணது...அந்தம்மா நடிப்பை பார்த்து ;-))
இப்படி ஓவராய் பில்ட் அப் பண்ணும்போதே தெரியும். ஊத்திக்கபோதுண்ணு. இப்ப சரியாய்ப் போச்சு.
Kamal Trishavukku Tamil tution edutha maathiri shurthikum eduthu irukalam .. atleast TRISHA ku kodutha NOTES ai yaavathu xerox pottu koduthu irukalam :)
Post a Comment