Tuesday, September 27, 2011

தினமலருக்கு தட்ஸ்தமிழ் கொடுத்த அறை



தினமலரின் தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் நாம் எல்லோரும் அறிந்தது தான். எப்போதுமே ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வது. உண்மையின் உரைகல் என்று சொல்லிக் கொண்டு உண்மைகளை திரிப்பது அல்லது உண்மைகளை இருட்டடிப்பு செய்வது, தனக்கு சாதகமான செய்திகளை மிகைப்படுத்தி எழுதி ஆனந்த கூத்தாடுவது அதே சமயத்தில் தனக்கு பாதகமாக ஏதாவது நடந்தால் அதை அப்படியே அமுக்கி வாசிப்பது என்று எல்லா உள்ளடி வேலைகளையும் தொடர்ந்து செய்து வருவது தான் தினமலர் என்று நம் அனைவருக்குமே தெரியும். இவைகளைப் பற்றி பலர் பல சமயங்களில் எழுதி தினமலரின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டு இருக்கிறார்கள். பலர் தினமலரை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் இவை எல்லாம் தினமலரை ஒரு துளியளவும் பாதிக்காது. அது தன் சகுனி வேலையை எவ்வித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது

தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சீசன் தொடங்கிவிட்டது. சட்டமனற தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி தான் தொடரும் என்று எல்லொரும் நினைத்துக் கொண்டு இருக்க அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்ற விதிமுறைக்கு ஏற்ப தேர்தல் களத்தில் பல காட்சி மாற்றம் ஏற்பட்டு அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. மிகவும் அண்மைக் கட்ட நிலைமையாக தே.மு.தி.க.வும் கம்யூனிஸ்டு கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து இருப்பதாக தெரிவித்து இருக்கின்றன. அவை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே தனியாகவே தேர்தலை சந்திக்கின்றன

இந்த தனியாக நிற்கும் கலாட்டாவை முதலில் ஆரம்பித்து வைத்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர் தான். சட்டமன்ற தேர்தலில் கிடைத்த மிகப் பெரும் தோல்விக்குப் பிறகு தன்னை கொஞ்சமும் சட்டை செய்யாத காங்கிரஸின் போக்கை கண்டு விரக்தி அடைந்த அவர் தான் முதன் முதலாக உள்ளாட்சி தேர்தலை தி.மு.க. தனியாக சந்திக்கும் என்று அதிரடியாக அறிவித்தார். எப்படா தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முறிவு ஏற்படும் என்று காத்துக் கொண்டு இருந்த தினமலரோ கலைஞரின் இந்த அறிவிப்பை கண்டு அடுத்த நாள் தனது தலைப்புச் செய்தியில் தி.மு.க. கூட்டணி டமார் என்று அறிவித்து ஆனந்த கூத்தாடியது. தினமலரின் இந்த நடவடிக்கையில் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை தான். கலைஞரே தனியாக நிற்கிறோம் என்று அறிவித்த பின் ஜெயலலிதா சும்மா இருக்க முடியுமா. அவரோ ஒரு படி மேலே போய் கூட்டணி கட்சிகளை கொஞ்சமும் சட்டை செய்யாமல் எல்லா தொகுதிகளுக்கும் தனிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தார். இப்போது அ.தி.மு.க. கூட்டணியும் டமார் என்று தானே தினமலர் தலைப்பு செய்தி போட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எல்லாம் செய்யுமா தினமலர் அது அ.தி.மு.க. கூட்டணி பற்றி அடக்கியே வாசித்தது

இன்று தினமலர் பாணியில் தட்ஸ்தமிழில் தலைப்பு செய்தியை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அது தினமலர் பாணியில் அ.தி.மு.க. கூட்டணி டமார் என்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆம் தினமலர் போன்ற உள்ளடி வேலை செய்யும் சக்திகளுக்கு இதுவே சரியான பதிலடியாக இருக்கும். வாழ்க தட்ஸ்தமிழ் தொடரட்டும் அதன் பணி

9 comments:

jaisankar jaganathan said...

//"தினமலருக்கு தட்ஸ்தமிழ் கொடுத்த அறை"//
அருமை

magesh kk said...

அது தினமலர் அல்ல! தினமலம்!

தமிழ்வாசி - Prakash said...

ஹா...ஹா... தினமலருக்கு "டமார்" அடித்த தட்ஸ்தமிழ்.

விக்கியுலகம் said...

good tuff!

Anonymous said...

தினமலருக்கு பதிலாக எந்த நாளிழைதின் பெயரை போட்டாலும் நீங்கள் சொல்லும் கருத்து பொருத்தமாயிருக்கும்.நாளிதழ்களில் பணி புரிபவர்கள் எந்த விதத்தில் புனிதமானவர்கள்? அவரவர் தனக்கு ஒத்த கருத்தையே அச்சில் ஏற்ற முயல்வர்.எதில் தினமலர் என்ன மற்ற இதழ்கள் என்ன?‌

முனைவர்.இரா.குணசீலன் said...

அனைவருக்குமே தெரியும்.

Anonymous said...

தினமலதிற்கு தட்ஸ்தமிழ் கன்னத்தில் கொடுத்த அறை சரியானது தான். அப்பவும் திருந்தும் என்று நினைக்கிறி ர்களா திருந்தாது இந்த பார்பன வந்தேறிக் கும்பல்கள். அவாளுக்கேன்றால் ஒரு மாதிரியாகவும் மற்றவர்களுக்கு என்றால் வேறுமாதிரியும் திரித்து எழுதும் தினமலரை தயவுசெய்து எல்லோரும் தினமலம் என்றே அழைக்கவும் அது தான் சரியான சொல்.

நன்றி
மஹாராஜா

kumar said...

தினமலர் என்றுமே தன் சகுனித்தனததை காட்டி கொண்டிருக்கிறது.

மருதநாயகம் said...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் பல

நண்பர்கள்