Sunday, July 10, 2011

எந்திரன் - சாதனையா? சோதனையா?? வேதனையா???

ரஜினி ரசிகர்களுக்கு தலைவர் படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே பண்டிகை மாதிரி தான். பண்டிகையாவது வருடத்துக்கு ஒரு முறை வந்தே தீரும் ஆனால் ரஜினி படம் வெளிவருவதற்கு ஒரு வருடமோ, இரண்டு வருடமோ அல்லது அதற்கும் மேலும் ஆகலாம். அப்படி காத்திருந்து பூத்திருந்து வெளிவரும் தலைவர் படத்துக்காக ரசிகர்கள் கொண்டாட தயாராவார்கள். போஸ்டர் என்ன, கடவுட் என்ன, பட்டாசு என்ன பாலாபிஷேகம் என்ன என்று அமர்க்களப்படுத்திவிடுவார்கள்

ரஜினி ரசிகர்கள் இப்படி தங்கள் தலைவர் படத்தை வரவேற்க தயாராகி வரும் வேளையில் இன்னொரு தரப்பும் தயாராகிவரும். அவர்கள் எதற்கு தயாராகி வருவார்கள் என்று சொல்கிறேன். அந்த தரப்பில் ஒரு சிலர் ரஜினி படத்தின் பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடுவார்கள், இன்னொரு சிலர் ரஜினி படம் ஓடும் தியேட்டரின் ஆபரேட்டரை கடத்திக் கொண்டு போவார்கள். இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல் ஏதாவது ஒரு மத்திய மந்திரி தன் இடைவிடா அலுவல்களுக்கு இடையிலும் ரஜினி தன் படத்தில் தம் அடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அட்வைஸ் செய்வார்

வேறு சிலரோ ரஜினி படத்தில் வரும் ஏதாவது ஒரு பாடலையோ அல்லது வசனத்தையோ எடுத்துக் கொண்டு ரஜினி தங்களை இழிவுபடுத்திவிட்டார் என்று அவர் மீது வழக்கு போடுவார்கள். இன்னும் சிலர் ரஜினி கன்னடர் அவர் தமிழ், தமிழ்நாடு என்று எல்லாம் தன் படப் பாடலில் சேர்க்கக் கூடாது என்று சொல்வார்கள். அத்தோடு முடிந்ததா என்று பார்த்தால் கர்நாடகாவில் இருக்கும் தியேட்டர்காரர்கள் எல்லோரும் சேர்ந்து ரஜினி மன்னிப்பு கேட்டால் தான் அவர் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிப்போம் இல்லாவிட்டால் அவர் படத்துக்கு தடை என்று கிளம்புவார்கள்.

இந்த் கூத்தை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் குறும்புக்கார ரசிகனோ ரஜினி நடித்த பாபா படம் தனக்கு பிடிக்கவில்லை அதனால் அதன் டிக்கெட் பணத்தை ரஜினி தனக்கு திருப்பி தர வேண்டும் என்று சொல்வான். வில்லங்கம் பிடித்த ரசிகனோ வெறும் டிக்கெட் பணத்தை மட்டும் கொடுத்தால் போதாது தான் சைக்கிளுக்கு போட்ட டோக்கனையும் திருப்பி தர வேண்டும் என்று சொல்லி கேட்பான்

பப்ளிக் தான் இப்படி என்று பார்த்தால் பத்திரிக்கைகளும் சும்மா இருக்காது. ரஜினி படத்தை பற்றி நாளும் ஒரு செய்தியை வெளியிட்டு தன் பங்குக்கு கல்லா கட்டும். சிம்ரன் கர்ப்பமாகிவிட்டார் அதனால் தான் அவர் சந்திரமுகியில் இருந்து தூக்கப்பட்டார் என்று கிளப்பிவிடும்.

பத்திரிக்கைகள் தான் இப்படி என்று பார்த்தால் நம் பதிவர்களும் தங்கள் பங்கிற்கு கிளம்பிவிடுவார்கள். ரஜினி நடித்த சிவாஜி படத்தின் பாட்லகள் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் முன்னாடியே இணையத்தில் வெளியானது. அப்படி வெளியான பாடல்களை தங்கள் வலைப்பூக்களில் இணைப்பு கொடுத்து கொண்டாடுவார்கள். தானும் ஒரு ரஜினி ரசிகன் தான் என்று சொல்லிக் கொண்டே பாடலையும் வெளியிடுவார்கள். சிவாஜி படமாவது படம் முழுக்க முடிவடைந்த பின்னர் பாடலை மட்டும் தான் வெளியிட்டார்கள். எந்திரன் படத்தில் இயக்குநர் ஷங்கர் நடத்திய முதல் கட்ட படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளையும் வெளியிட்டு மகிழ்ந்தார்கள்

பதிவர்கள் தான் பொழுது போகாமல் இப்படு செய்கிறார்கள் என்றால் இயக்குநர் ஷங்கரும் தன் பங்கிற்கு சும்மா இருக்கமாட்டார். சிவாஜி படம் வருமா வராதா என்கிற ரேஞ்சுக்கு இழுத்தடித்து இறுதியாக வெளியிட்டார். எந்திரன் படம் எடுத்துக் கொண்டு இருக்கும் போது வெளியான அவதார் படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் எந்திரனையும் 3டியில் மாற்றப் போவதாக ஒரு செய்தி வந்தது. அது படி அவர் 3டியில் மாற்றும் முயற்சியில் மட்டும் இறங்கி இருந்தால் இன்னும் எந்திரன் படம் வெளிவராமல் இருந்திருக்கும். கலாநிதி மாறன் வசம் படம் வந்துவிட்டதால் இயக்குநரால் 3டி முயற்சி பற்றி அதிகம் அழுத்தம் கொடுக்க முடியவில்லை. இதுவே ஏ.எம்.ரத்தினமாகவோ அல்லது வேறு தயாரிப்பாளராகவோ இருந்தால் அதோ கதி தான் அவருக்கு

இப்படி மேலே சொன்ன சோதனைகள் ஏதும் இல்லாமல் எந்திரன் படம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் வெளிவந்து ஓடி முடித்துவிட்டதே அது நிச்சயமாக ஒரு சாதனை தான். அந்த சாதனை சாத்தியமானது ரஜின்ஏன்கிற மந்திரத்தால் அல்ல. அதற்கு காரணம் யார் என்று ரஜினியே மலேசியாவில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவிலும் பின்னர் படம் வெளிவந்த பின் தான் கொடுத்த தொலைக்காட்சிப் பேட்டியிலும் ரஜினியே தன் வாயால் புகழ்ந்து பேசினார். இந்த பதிவில் எந்திரனின் சோதனைகளையும் சாதனையையும் பார்த்தோம் அடுத்து இன்னொரு பதிவில் எந்திரனின் வேதனையை பார்க்கலாம்

1 comments:

ஆகாயமனிதன்.. said...

போதனை என்ற பெயரில் ரோதனை !

நண்பர்கள்