TwitterFox – FireFoxல் ஒரு ட்விட்டர் கும்மி
நான் ஏற்கனவே சொல்லிய படி ஃபயர்ஃபாக்ஸில் பல வசதிகளை அடிக்கிக் கொண்டே போக முடியும் என்பது தெரிந்தது தான். இப்படி வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு இணைப்புகள் (Add-ons) பல இருக்கின்றன. அதில் ஒன்று தான் இந்த TwitterFox. இப்போது பிரபலமாகி வரும் ட்விட்டர் சேவையை ஃபயர்ஃபாக்ஸில் இருந்தே பெற முடியும். உங்கள் கும்மிகளை படிக்க ட்விட்டர் தளத்துக்கு சென்று ஒவ்வொரு முறையும் உங்கள் பெயர் மற்றும் கடவுச் சொல்லை கொடுத்து போக தேவை இல்லை.
TwitterFoxஐ ஃபயர்ஃபாக்ஸில் இணைக்க, ஃபயர்ஃபாக்ஸில் "Tools -> Add-ons" மெனுவில் "Get Add-ons" பக்கத்தில் போய் TwitterFox என்று தேடினால் TwitterFox தோன்றும் அதை "Add to FireFox" என்ற பட்டனை அழுத்தி ஃபயர்ஃபாக்ஸில் இணைத்துக் கொள்ளலாம். அப்புறம் என்ன இனி 24/7 ட்விட்டர் கும்மி தான்

1 comments:
இஃகிஃகி!
Post a Comment