Firefox - ஒரு சிறிய ஆபரேட்டிங் சிஸ்டம்
நான் சமீப காலங்களில் அதிகம் பயன்படுத்திய மென்பொருள் ஃபயர்ஃபாக்ஸ் என்றால் அது மிகையாகாது. நான் ஏற்கனவே ஃபயர்ஃபாக்ஸ் இணைப்புகள் பற்றி சில பதிவுகள் எழுதி இருந்தேன். பிரபல பதிவரான நெருங்கிய நண்பர் இப்படி "பிட்டு" "பிட்"டாக எழுதுவதற்கு பதில் ஒரே பதிவாக தொகுத்து எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொன்னதால் ஃபயர்ஃபாக்ஸின் இணைப்புகள் பற்றி தொகுத்து இங்கே தருகிறேன். இந்த இணைப்புகள் நான் தற்சமயம் பயன்படுத்தி வருபவை இவை தவிர மேலும் ஏராளமான இணைப்புகள் இருக்கின்றன. உங்கள் வசதிக்கேற்ப இவற்றை நிறுவி பயன்பெறவும்
FoxyTunes - இந்த இணைப்பை பயன்படுத்தி நீங்கள் இணையத்தில் உலவியபடியே பாடல்களை கேட்டு கொள்லலாம். ஃபயர்ஃபாக்ஸில் ஒரே நேரத்தில் பல டேப்புகளை (tabs) திறந்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றிலும் ஒரு தளத்தை பார்வையிடலாம். அப்படி ஏதாவது ஒரு டேப்பில் mp3 பாடல்களை கொண்ட இணைய தளத்தை ஓபன் செய்து அதில் உள்ள பாடல்களை தரவிறக்கம் செய்யாமல் அப்படியே கேட்டு ரசிக்கலாம்
TwitterFox - நீங்கள் டிவிட்டர் கணக்கு வைத்து இருந்தால் உங்கள் தகவல்களை டிவிட்டர் தளத்துக்கு செல்லாமல் ஃபயர்ஃபாக்ஸில் இருந்தபடியே பார்க்கலாம். ஃபயர்பாக்ஸில் இருந்தபடியே உங்கள் டிவிட்டர் கும்மிகளை அப்டேட் செய்யலாம்
GMail notifier - உங்கள் ஜிமெயிலில் உங்களுக்கு அஞ்சல் வந்தால் இந்த இணைப்பு உங்களுக்கு உடனே தெரிவிக்கும். இதன் மூலம் உங்கள் பதிவிற்கு பின்னூட்டம் வருவதை தெரிந்து கொள்ளலாம்
ScribeFire - இது பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. உங்கள் பதிவுகளை ஃபயர்ஃபாக்ஸில் இருந்தபடியே எழுதலாம். நான் இந்த பதிவு எழுதுவது் இதன் மூலம் தான். படங்கள், வீடியோ ஆகியவை இணைப்பது போன்ற பல வசதிகளும் இதில் இருக்கிறது. நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுபவராக் இருந்தால் இந்த இணைப்பு மூலம் பிழைகளை திருத்திக் கொள்ள dictionary வசதியும் இருக்கிறது
FireFtp - blogger, wordpress என்று இல்லாமல் சொந்தமாக domain வைத்து இருப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Read it later - இது நான் அடிக்கடி பயன்படுத்துவது. தமிழ்மணத்தில் பல புதிய பதிவுகள் வரும்போது அவற்றை குறித்து வைத்துக் கொண்டு பின் நேரம் கிடைக்கும் போது ஆசுவாசமாக படித்து ரசிப்பேன்
Video downloader - YouTube முதலான வீடியோ தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யலாம்
இவை தவிர மேலும் சில சுவாரஸ்யமான இணைப்புகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு நீங்கள் எந்தெந்த தளங்களில் அதிக நேரம் செல்விடுகிறீர்கள் என்பதை graph வடிவில் மிக அழகாக காட்டும் இணைப்பு இருக்கிறது. வீட்டில் சிறுவர்கள் இருந்தால் அவர்களின் நலனுக்காக எந்தெந்த வலைத்தளங்களுக்கு அவர்கள் செல்லலாம் என்று வரையறுக்கும் parental locks உள்ள இணைப்பும் இருக்கிறது. அதன் பெயர் Glubble.
ஒவ்வொரு இணைப்பை நிறுவிய பின் Restart Firefox என்று மெஸ்ஸேஜ் வருகிறது இது கணினியில் புதிதாக மென்பொருள் நிறுவினால் Restart Windows என்ற மெஸ்ஸேஜ் வருமே அது போல் இருக்கிறது. அதனால் ஃபயர்ஃபாக்ஸே ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் போன்ற உணர்வு ஏற்படும்

4 comments:
Well. Thanks.
எல்லாம் சரி..ஆனால் அதென்ன சிறிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ? பயர்பாக்ஸ் கணினியின் வன்பொருளை நேரடியாக இயக்குவதில்லையே. அப்படி இருந்தால் விண்டோஸ்க்கும், லினக்ஸுக்கும் தனித்தனி பயர்பாக்ஸ் மென்பொருள்கள் எதற்கு ?
சிறப்பான கட்டுரை, நன்றி
Keep it up.
நல்ல தகவல்கள்
நன்றி
Post a Comment