Wednesday, September 03, 2008

Firefox 3.1ஐ அடிச்சுக்க முடியாது

Google Chrome வந்த பின் எல்லோரும் அது மிக விரைவாக இயங்குகிறதாக சொல்கிறார்கள். இது உண்மையாக இருக்கலாம். விரைவாக இயங்குவதற்கு Google சில நிறுவணங்களுடன் மேற்கொண்ட முயற்சியின் பலன் தான் அது. ஆனால் இந்த இயங்கும் வேக வித்தியாசம் ஒன்றை தவிர வேறு எதுவும் இப்போதைக்கு Google Chromeல் புதியதாக ஒன்றும் இல்லை என்று தெரிகிறது. முக்கியமாக பிரவுசரை செயல் இழக்க வைக்கும் ஆற்றல் கொண்ட plug-insகளை கையாளும் விதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று Google நிறுவணமே தெரிவித்து இருக்கிறது. Google தனது தேடல் சேவையை பிரவுசரில் ஒருங்கிணைத்தது மட்டுமே இப்போதைக்கு Chromeன் ஒரே துருப்புச் சீட்டு. வரும் காலத்தில் Google Chromeன் மெருக் கூடலாம்

ஆனால் plug-insகளை கையாள்வதற்கு Firefoxல் add-ons இருக்கிறது. Add-ons மூலம் Firefoxல் பல கூலான வசதிகளை பெறலாம். உதாரணத்துக்கு காலண்டர், Google Chromeல் இருப்பது போல் முகப்பு பக்கத்தில் history, தரை இறக்கம் செய்யாமலே mp3 பாடல்களை கேட்பது போன்ற ஏராளமான வசதிகள் இருக்கின்றன. Firefox add-ons பக்க முகவரி Firefox add-ons. Firefoxன் இந்த நிலையை எட்டிப் பிடிக்க Google Chromeக்கு இன்னும் கொஞ்சம் நாள் ஆகும். ஆனால் Googleன் நோக்கம் அதுவல்ல என்று தெரிகிறது

0 comments:

நண்பர்கள்

Blog Archive