Friday, September 12, 2008

ரோபோ: இயக்குநர் ஷங்கர் அடிக்கும் பிரம்மாண்ட கும்மி

அடுத்து ஆரம்பிச்சுட்டாங்கய்யா, இந்த முறை "ரோபோ"வாம். "ரோபோ - ஒரு இயந்திரன்" பெயர் மாற்றம், ஐஸ்வர்யா ராயின் பெயர் படத்தின் பிரொமோக்களில் ரஜினிக்கு இணையாக இடம் பெறும் (ரஜினிக்கு தன் மீது நம்பிக்கை இல்லை போல் இருக்கிறது) என்று பில்டப்புகளை ஆரம்பிச்சுட்டாங்கய்யா. நம் பங்குக்கு சும்மா இருக்க முடியுமா...

இயக்குநர் ஷங்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய இந்தியன் மற்றும் முதல்வன் படங்களை மிகவும் ரசித்தவன். காதலன் மற்றும் ஜீன்ஸ் போன்ற படங்கள் எனக்கு அவ்வளவாக பிடிக்காவிட்டாலும் ஒரு இயக்குநர் ஒரே மாதிரி படங்களை கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவருடைய சமீபத்திய படங்களுக்கு கொடுக்கப்படும் பில்டப்புகளை பார்க்கும் போது என்னவோ அவர் ஹாலிவுட் அல்லது உலகதரமான படங்களை கொடுப்பவர் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. அவருடன் ரஜினியும் சேர்ந்துவிட்டால் கேட்கவா வேன்டும். ஏற்கனவே ரஜினியை பற்றி பலரும் எழுதிவிட்டதால் இந்த முறை இயக்குநர் ஷங்கர் எப்படி எல்லாம் உருவுகிறார் என்று பார்க்கலாம்

முதலில் பாய்ஸ் படம், வழக்கமாக ஃபேண்டஸி கதைகளை தந்து கொண்டு இருந்த இயக்குநர் ஷங்கர் திடீரென்று இயல்பான கதைக்கு மாறிவிட்டாரோ என்று நினைத்தால் பின்னர் தான் புரிகிறது அந்த படம் இந்தியில் வந்த "தில் சத்தா ஹை" படத்தின் பாதிப்பு என்று. "தில் சத்தா ஹை" படம் மூன்று நகரத்து இளைஞர்களை சுற்றி நகரும் படம். பாய்ஸ் படமும் இதே மாதிரி ஐந்து நகரத்து இளைஞர்களை சுற்றி நகரும் படம். அப்புறம் படத்தின் கிளைமேக்ஸில் MTV நடத்தும் போட்டி. இதை அப்படியே இந்தியில் தாள் (தமிழில் தாளம்) படத்தில் கிளைமேக்ஸில் MTV நடத்தும் போட்டி வரும், அதில் இருந்து உருவியது

அப்புறம் அந்நியன் படம் வந்தது. இந்த படம் கிட்டத்தட்ட சந்திரமுகியை போன்ற கதை உடையது. சந்திரமுகி முந்திக் கொண்டு பட்டையை கிளப்பியதால், சுஜாதவின் புண்ணியத்தில் கருடபுராணம் போன்று சில எக்ஸ்ட்ரா ஃபிடிங்கை சேர்த்து வெளியிட்டு, விக்ரமின் கடின உழைப்பால் அதுவும் வெற்றி பெற்றுவிட்டது. இந்தியில் ஷாருக்கான் நடித்த இரு படங்களின் பெயர்கள் பர்தேஸ் மற்றும் ஸ்வதேஸ். ஷங்கரும் இந்தியன் என்று ஏற்கனவே பெயர் வைத்து வெற்றி கண்டதால் இந்த முறை (இந்தியன்/)அந்நியன் என்று பெயர் வைத்தார். அந்நியனில் அந்நியன் பேசும் மாடுலேஷன் டெர்மினேட்டரில் வரும் அர்நால்டை நினைவுபடுத்தியது என்பது ஊரறிந்த விஷயம்

சிவாஜியில் என்ன கதை? அமெரிக்காவில் இருந்து திரும்பும் நாயகன் தன் சொந்த மக்களுக்கு நன்மை செய்ய விரும்புகிறார். இந்தியில் ஸ்வதேஸில் என்ன கதை என்று கொஞ்சம் யோசித்து பார்த்தால் சிவாஜி கதை எங்கே இருந்து உருவியது என்று புரியும். இதெல்லாம் வெளியே தெரியாதபடி 50 கோடி, பிரம்மாண்ட செட்டுகள், ஸ்ரேயா போன்று ஜிகினா வேலைகள் காட்டி நன்றாக மறைத்துவிட்டார் ஷங்கர்

இப்போது ரோபோ படம் ஆரம்பித்துவிட்டதாம். ஷங்கர் பிரம்மாண்டமாக உருவுவதில் தவறு ஏதும் சொல்வதற்கு இல்லை. ஆனால் ரோபோ படம் வரும் வரை அனுதினமும் செய்திகளில் கொடுக்கப்படும் பில்டப்புகளை தான் சகித்து கொள்ள முடியாது

32 comments:

வெட்டிப்பயல் said...

அண்ணே,
தசவதாரத்துக்கும் இதே அளவு பில்ட் அப் இருந்துச்சே...

கமல் எடுத்த ஒன்றரை நிமிஷம் ட்ரைலருக்கே எவ்வளவு பில்ட் அப் இருந்துச்சு.. உங்க பிளாக் பேரே அது தான். நீங்க ரஜினி படத்தை பத்தி டென்ஷனாகறீங்க :)

போட்ட காசை எடுக்கற அளவுக்கு ஷங்கர் படம் எடுக்கறாரு. அதனால ப்ரொட்யூசர்ஸ் தைரியமா காசு கொடுக்கறாங்க.

கலைப்புலியை கலை எலி ஆக்கிய பெருமை கமலஹாசனுக்கு இருக்கு. ஆனா எந்த ப்ரொட்யூசரையும் அப்படி ஆக்கன பெருமை ஷங்கருக்கு இல்லை. ரஜினிக்கும் இல்லை.

தசவதாரம் ஹிட் ஆனதால தான் இப்ப மர்ம யோகி வருதுனு மறந்துடக்கூடாது... அதுவும் பிரமாண்டமான படம் தான். அதை பத்தியும் நியூஸ் வரும்.

ஆனா ரஜினி படம் வரும் வரைக்கும் மர்ம யோகியை கண்டுக்க மாட்டாங்க :)

மருதநாயகம் said...

//ஆனா எந்த ப்ரொட்யூசரையும் அப்படி ஆக்கன பெருமை ஷங்கருக்கு இல்லை
//

A.M.ரத்னம் அப்படின்னு ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார். பாத்தீங்களா நீங்க கூட அவரை மறந்துட்டீங்க. இந்த பெருமை எல்லாம் யாரை சேரும்

வெட்டிப்பயல் said...

// மருதநாயகம் said...

//ஆனா எந்த ப்ரொட்யூசரையும் அப்படி ஆக்கன பெருமை ஷங்கருக்கு இல்லை
//

A.M.ரத்னம் அப்படின்னு ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார். பாத்தீங்களா நீங்க கூட அவரை மறந்துட்டீங்க. இந்த பெருமை எல்லாம் யாரை சேரும்//

அந்த பெருமை அவர் பெற்ற பிள்ளைகளையே சேரும் :) KD பார்த்தீங்களா? அப்பறம் தெலுகுல அவர் எடுத்த பல படங்கள்..

பவன் கல்யாண் வெச்சி தரணி டைரக்ஷன்ல எடுத்த பங்காரம் பயங்கர ஃபிளாப்.

அடுத்து பீமா...

நாயக் அப்பறம் அவருக்கு ஷங்கர் எடுத்து கொடுத்த பாய்ஸ் தெலுகுல நல்லா ஓடுச்சு :)

கிரி said...

//ரோபோ படம் வரும் வரை அனுதினமும் செய்திகளில் கொடுக்கப்படும் பில்டப்புகளை தான் சகித்து கொள்ள முடியாது//

இதெல்லாம் யார் கொடுக்கிறது பத்திரிக்கைங்க..இவங்களா ஏதாவது போட்டு காசு பார்ப்பாங்க அதுக்கு ரஜினியும் ஷங்கரும் என்ன பண்ணுவாங்க..

அப்புறம் சும்மா ரஜினியை குறை கூறி புலம்புவதை நிறுத்தி விட்டு கமலை உயர்த்தி சொல்ல முயற்சி செய்யுங்க....இருவருமே சிறந்தவங்க தான் தங்கள் நிலைகளில்.

இதுல அப்படியே நடுநிலைமையா சொல்வதா நினைத்து அப்பப்ப ரஜினியை உயர்த்தி கூறி அப்புறம் கேவலப்படுத்துறது....

ஒருத்தரை உயர்த்த, என்னைக்கும் இன்னொருவரை தாழ்த்தி பேசாதீங்க. அதன் பெயர் வயித்தெறிச்சல், பொறாமை தவிர வேறு ஒன்றுமில்லை.


//A.M.ரத்னம் அப்படின்னு ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார். பாத்தீங்களா நீங்க கூட அவரை மறந்துட்டீங்க. இந்த பெருமை எல்லாம் யாரை சேரும்//

அந்த படம் லாபம் இல்லாமல் வேண்டும் என்றால் இருக்கலாம் அதனால் நஷ்டம் இல்லை.

மருதநாயகம் said...

//அந்த பெருமை அவர் பெற்ற பிள்ளைகளையே சேரும்//

பிரம்மாண்ட படங்களை தயாரிச்சுட்டு இருந்தவர் A.M.ரத்னம். அவரை ஒரு நடிகருக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் தன் மகனை வைத்து படம் எடுக்கும் அவல நிலைக்கு தள்ளியது யார்

மருதநாயகம் said...

வருகைக்கு நன்றி கிரி, நான் யாரையும் தாக்கி எழுதவில்லை, பிம்பங்களுக்கு பின்னே ஒளிந்து இருக்கும் உண்மையை தோலுரித்து காட்டினேன். உங்கள் தலைவர் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால், "உண்மையை சொன்னேன்"

Anonymous said...

//பிரம்மாண்ட படங்களை தயாரிச்சுட்டு இருந்தவர் A.M.ரத்னம். அவரை ஒரு நடிகருக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் தன் மகனை வைத்து படம் எடுக்கும் அவல நிலைக்கு தள்ளியது யா//

ஜீன்ஸ் தோல்வி படம் இல்லை.படத்தின் மொத்த பட்ஜெட் 16 கோடி. தமிழ்நாட்டில் ஒரு மாதம் ஓடியது. ஆந்திராவில் பல செண்டர்களில் 100 நாட்கள் ஓடியது.

ஏ எம் ரத்னம் அழிந்து போனதர்க்கு காரணம் அளவுக்கு மீறிய வட்டிக்கு வாங்கிய பைனான்ஸ் கடன் தான்.

சும்மா விவரம் புரியாம உளற கூடாது ரவி அண்ணாச்சி

வெட்டிப்பயல் said...

//மருதநாயகம் said...

//அந்த பெருமை அவர் பெற்ற பிள்ளைகளையே சேரும்//

பிரம்மாண்ட படங்களை தயாரிச்சுட்டு இருந்தவர் A.M.ரத்னம். அவரை ஒரு நடிகருக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் தன் மகனை வைத்து படம் எடுக்கும் அவல நிலைக்கு தள்ளியது யார்//

சிரியசா பேசறீங்களா இல்லை காமெடி பண்றீங்களானே தெரியலையே :)

சம்பளம் கொடுக்க முடியாமலா பையனை வெச்சி படம் எடுத்தார்... அப்படி எடுத்த படத்து காசை வெச்சி பவன் கல்யானை வெச்சி படம் எடுத்தாரா? என்னமா லாஜிக் பேசறீங்க. சூப்பர் :)

பாய்ஸ்க்கு அப்பறம் அவர் எடுத்த கில்லி, 7 G Rainbow Colony எல்லாம் பயங்கர ஹிட்...

இப்பவும் அவர் பவன் கல்யாண் வெச்சி படம் எடுக்கறார். கடைசி பவன் கல்யாண் படம் ஜல்சா ஹிட். இப்ப இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் :)

சரி.. ஓவர் பில்ட் அப் மருதநாயகம் படத்தை பத்தி நீங்க சொல்லுங்க...

வெட்டிப்பயல் said...

இது வரை தமிழில் எடுக்கப்பட்ட பிரமாண்ட படம்னு தசவதாரத்தை சொல்றாங்க. அதோட பாட்டு ரிலீஸ்க்கு ஜாக்கி ஜான் எல்லாம் வந்தாரு. அதுவும் பிரமாண்ட கும்மி தானே :)

மருதநாயகம் said...

வெட்டி சார், நான் சீரியஸா தான் சொல்றேன், நீங்க இப்பதான் உண்மையை ஒத்துகிட்டு இருக்கீங்க. பாய்ஸுக்கு பின் வந்த படங்கள் வெற்றி பெற்றன என்பது உண்மை தான். அந்த படங்கள் எல்லாம் பாய்ஸ் மாதிரி பெரிய பட்ஜெட் படங்கள் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அந்த படங்களின் வெற்றியால் கூட பாய்ஸ் படத்தின் மூலம் ஷங்கர் அடிச்ச ஆப்பை ஈடுகட்ட முடியவில்லை என்பது தான் உண்மை

வெட்டிப்பயல் said...

பாய்ஸ்க்கு அப்பறம் அவர் எடுத்த கில்லி, பங்காரம், பீமா எல்லாம் பெரிய நடிகர்களை போட்டு எடுத்த படங்கள். நஷ்டமடைஞ்சவர் தான் இப்படி பெரிய நடிகர்களை போட்டு படம் எடுக்கறாரா???

ஆளவந்தான் படம் ஃபிளாப் ஆனதுக்கு தாணுக்கு கமல ஹாசன் என்ன செய்தார்? ஆளவந்தான் அவ்வளவு பிரமாண்டமா எடுக்க வேண்டிய தேவை தான் என்ன?

ஷங்கர் அடிக்கிற பிரமாண்ட கூத்துக்கு எந்த விதத்துலயும் ஒரு சதவிகிதம் கூட குறையாத பிரமாண்ட கூத்துகளை கமல் செய்யறாரே. அதுக்கு என்ன சொல்றீங்க? ஷங்கர் பிரமாண்டமா எடுத்து ஃபிளாப் ஆன படங்களை விட கமல் அதிகமா ஃபிளாப் கொடுத்திருக்கார்.

கலைப்புலி தாணு இன்னும் எந்த பெரிய நடிகர்களையும் வெச்சி படம் எடுக்க முடியாத நிலைமைல தான் இருக்கார்.

வெட்டிப்பயல் said...

ஏன் என்னோட எல்லா பின்னூட்டத்தையும் வெளியிட மாட்றீங்க? ஏதாவது தப்பா பேசறனா?

முன்னாடியும் கிரியோட பின்னூட்டத்துக்கு அப்பறம் என்னோடதை வெளியிடறீங்க...

மருதநாயகம் said...

உங்கள யாராச்சும் குறை சொல்ல முடியுமே வெட்டி சார்! பின்னூட்டங்களை நான் எப்போதும் Gmail வழியாக தான் வெளியிடுவேன். அதனால் முன்னுக்கு பின்னாக வெளிவரலாம். இதனால் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டு இருந்தால் அதற்காக வருந்துகிறேன்

கிரி said...

//இன்னும் சொல்லப் போனால் அந்த படங்களின் வெற்றியால் கூட பாய்ஸ் படத்தின் மூலம் ஷங்கர் அடிச்ச ஆப்பை ஈடுகட்ட முடியவில்லை என்பது தான் உண்மை//

என்னங்க! லாஜிக்கா பேசுங்க! அந்த அளவுக்கு நஷ்டம் அடைந்து இருந்தால் எப்படி ஒருவர் படம் எடுக்க முடியும். அவருக்கு தமிழ் பாய்ஸ் படத்தால் லாபம் இல்லாமல் இருக்கலாம் நஷ்டம் இல்லை, நாயக் படத்தால் மட்டுமே அவருக்கு நஷ்டம் அது தெலுங்கு பாய்ஸ் படத்தால் ஈடுகட்டப்பட்டது, தெலுங்கு பாய்ஸ் எப்படி ஓடியது என்று தெலுங்கு காரங்களை கேட்டு பாருங்க.

வெட்டிப்பயல் said...

//மருதநாயகம் said...

உங்கள யாராச்சும் குறை சொல்ல முடியுமே வெட்டி சார்! பின்னூட்டங்களை நான் எப்போதும் Gmail வழியாக தான் வெளியிடுவேன். அதனால் முன்னுக்கு பின்னாக வெளிவரலாம். இதனால் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டு இருந்தால் அதற்காக வருந்துகிறேன்//

வெட்டி சாரா? இதெல்லாம் டூ மச்சா தெரியல? :)

எனக்கு சிரமம்னு எதுவுமில்லை... ஏதாவது தனிமனித தாக்குதல் மாதிரி ஃபீல் பண்றீங்களோனு நினைச்சேன். இவ்வளவு பேசறதால எனக்கு கமல் பிடிக்காதுனு கிடையாது.

முடிந்த வரை கமல் படங்களையும் முதல் நாளே பார்த்துவிடுவேன். ஆனா நீங்க கட்டம் கட்டி ரஜினியை அடிக்கிறது தான் சரியில்லை...

பிரமாண்டம்னு சொல்லி ஷங்கரை அடிக்கறதும். அதே பிரமாண்டத்தை தான் கமலும் போட்டி போட்டுட்டு பண்றார். அதை நீங்க கண்டிப்பா ஒத்துக்க மாட்டீங்க :)

ILA said...

கமல் ரசிகர்னு நிரூபிச்சுட்டீங்க போல?

மருதநாயகம் said...

//கமல் ரசிகர்னு நிரூபிச்சுட்டீங்க போல?//

இப்பவாச்சும் நம்புறாங்களே

மருதநாயகம் said...

//ஏதாவது தனிமனித தாக்குதல் மாதிரி ஃபீல் பண்றீங்களோனு நினைச்சேன்//

கெட்ட வார்த்தைகளால் திட்டாத வரைக்கும் நான் பொதுவாக எல்லா பின்னூட்டங்களையும் வெளியிட்டுவிடுவேன் அப்படி இருந்தும் உங்கள மாதிரி செஞ்சுரி இல்லை ஒரு அரை செஞ்சுரி போடுவது கூட மிக கடினமாக இருக்கிறது

கப்பி | Kappi said...

தல

நல்லவேளை..இப்ப கமல் நடிச்சு ஷங்கர் படம் எதுவும் எடுக்கல..இல்லனா நீங்க அவரை புகழ்ந்து பதிவெழுதிருக்கனும் :))

மருதநாயகம் said...

//
கப்பி | Kappi said...
தல

நல்லவேளை..இப்ப கமல் நடிச்சு ஷங்கர் படம் எதுவும் எடுக்கல..இல்லனா நீங்க அவரை புகழ்ந்து பதிவெழுதிருக்கனும் :))
//

அய்யோ! சமத்த்த்த்து !!!

வெட்டிப்பயல் said...

//கப்பி | Kappi said...

தல

நல்லவேளை..இப்ப கமல் நடிச்சு ஷங்கர் படம் எதுவும் எடுக்கல..இல்லனா நீங்க அவரை புகழ்ந்து பதிவெழுதிருக்கனும் :))//

நான் ஏழு எட்டு பின்னூட்டத்துல சொன்னதை ஒரே பின்னூட்டத்துல சொல்லிட்டப்பா.. கலக்கல் :)

கப்பி | Kappi said...

//அய்யோ! சமத்த்த்த்து !!!/

அய்யோ இல்லீங்ண்ணா! ஷங்கர்-ரஜினி படமெல்லாம் பார்த்து ரசிக்கற கோஷ்டிங்கண்ணா.சமத்து கம்மிதானுங்கண்ணா!!

SathyaPriyan said...

//
அப்படி இருந்தும் உங்கள மாதிரி செஞ்சுரி இல்லை ஒரு அரை செஞ்சுரி போடுவது கூட மிக கடினமாக இருக்கிறது
//
நாம எல்லாரும் செஞ்சுரி அடிச்சா நமக்கும் வெட்டிப்பயலுக்கும் என்ன வித்தியாசம்? King is always king இல்லயா?

வெட்டி குடுத்த காசுக்கு கூவிட்டேனா?

மருதநாயகம்,

பதிவிற்கு பதிலளிக்கும் முன்பு ஒன்றை சொல்லி விடுகிறேன். நான் ஒரு 100 சதவிகித கலப்படமில்லாத கமல் ரசிகன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு முரளிகண்ணனின் இந்தப் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்.

/
முரளி கண்ணன், கமல் ரசிகரான உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவை பார்த்ததில் எனக்கு சிறிது வருத்தமே. ரஜினியிடம் தலைமை பண்பு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? அவர் ஒரு சிறந்த நடிகர், entertainer.

அன்பேசிவத்தையும், விருமாண்டியையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க முடியாதே. சிவாஜியும் தேவை அல்லவா?

அவரும் சராசரி மனிதரே. அவருக்கு இருக்கும் பேருக்கும் புகழுக்கும் அவர் சந்திக்கும் இத்தகைய விமர்சனங்கள் அவர் கொடுக்கும் கூலி. நாமும் அதனை அதிகப் படுத்த வேண்டாமே.

கமல் சந்திக்காத விமர்சனங்களா? ஆளவந்தான் தொடங்கி தசாவதாரம் வரை அவர் ஒவ்வொரு படம் எடுத்து வெளியிடுவதற்குள் அவர் படும் பாடு நாம் அறியாததல்லவே. இத்தனைக்கும் அவர் அரசியலில் சேராதவர்.

அனைத்தையும் ஒதுக்கி விட்டு ரோபோவை ரசிப்போம், மர்மயோகியை சிலாகிப்போம் (கமல் ரசிகர்களாக).

எனது தனிப்பட்ட கருத்துக்கள். தங்களை வருத்தி இருந்தால் இதனை வெளியிட வேண்டாம். மன்னியுங்கள்.
/

இதன் சாரத்தையே இந்தப் பதிவிற்கும் பதிலாக அளிக்கிறேன். கமலை பற்றிய பாராட்டி எழுத எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதனை எல்லாம் விட்டு ரஜினியுடன் ஒப்பிட்டுத் தான் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லையே.

கமலின் தனிப்பட்ட வாழ்வினை அநாகரீகமாக ரஜினி ரசிகர்கள் விமர்சிப்பதும், ரஜினியை மென்டல் என்றெல்லாம் மனிதாபிமானமே இல்லாமல் கமல் ரசிகர்கள் கூறுவதும் (உங்களை கூறவில்லை, ஆர்குட் தளத்தில் நடக்கும் கூத்துக்களை கூறுகிறேன்.) தமிழ் சினிமாவின் சகாப்தங்கள் இருவரை கேவலப் படுத்தும் செயல் அல்லவா?

இதனை எடுத்து கூறினால் உடனே இருவரின் ரசிகர்களும் கமல் ரசிகர்களாக மாறி "அவனை நிறுத்த சொல்லு, நான் நிறுத்தறேன்." என்று கமலின் வசனம் பேசுகிறார்கள்.

மாற்றத்தை நம்மிடமிருந்தே தொடங்குவதே கமல் ரசிகர்களாக நாம் அவருக்கு செய்யும் மரியாதையாக அமையும்.

மருதநாயகம் said...

//கிரி said...
தெலுங்கு பாய்ஸ் எப்படி ஓடியது என்று தெலுங்கு காரங்களை கேட்டு பாருங்க.
//

பாய்ஸ் படம் வந்த போது எங்க டீமில் எல்லோரும் தெலுங்கு பசங்க தான். காறி துப்பிவிட்டார்கள் படத்தை பார்த்துவிட்டு

மருதநாயகம் said...

//வெட்டிப்பயல் said...
//கப்பி | Kappi said...

தல

நல்லவேளை..இப்ப கமல் நடிச்சு ஷங்கர் படம் எதுவும் எடுக்கல..இல்லனா நீங்க அவரை புகழ்ந்து பதிவெழுதிருக்கனும் :))//

நான் ஏழு எட்டு பின்னூட்டத்துல சொன்னதை ஒரே பின்னூட்டத்துல சொல்லிட்டப்பா.. கலக்கல் :)
//



நல்லவேளை..ஷங்கரை புகழ்ந்து பதிவு எழுதுறது ரொம்ப கஷ்டமாச்சே

மருதநாயகம் said...

//கப்பி | Kappi said...
//அய்யோ! சமத்த்த்த்து !!!/

அய்யோ இல்லீங்ண்ணா! ஷங்கர்-ரஜினி படமெல்லாம் பார்த்து ரசிக்கற கோஷ்டிங்கண்ணா.சமத்து கம்மிதானுங்கண்ணா!!
//

ஒருவேளை அந்நியன் மாதிரி அப்பப்போ சமத்தா மாறீடுவீங்களோ

மருதநாயகம் said...

//
SathyaPriyan said...

மாற்றத்தை நம்மிடமிருந்தே தொடங்குவதே கமல் ரசிகர்களாக நாம் அவருக்கு செய்யும் மரியாதையாக அமையும்
//
SathyaPriyan! உங்க கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். எனக்கும் அடிக்கடி ரஜினியை வாருவது ஓவராகபட்டதால் தான் இந்த முறை ஷங்கர் மாட்டினார், இனி தவிர்க்க பார்க்கிறேன்

Great said...

கதை என்று எதுவும் இல்லாவிட்டாலும் டெக்னிக்கலாக மிரட்டுவார் என்று ஷங்கர் மேலிருந்த இமேஜும் சிவாஜி படத்தில் பறிபோனது.
சஹானா... பாட்டுக்கு பிரமாண்டம் காட்டுகிறேன் என்று பல கோடி செலவில் கண்ணாடிகளால் செட் போட்டார். அப்புறம் ஷூட்டிங்கின் போது லைட்டிங் சரியாக வைக்க முடியாமல் திணறி ஏதேதோ சொல்லி சமாளித்து வேர்த்து வடித்து உற்ற்ற்ற்ற்... முகத்துடன் அப்பாடலை எடுத்து முடித்தார். இப்போது கூட நீங்கள் அந்த பாடலை பார்த்தால் ரஜினி, ஷ்ரேயா நிழல் தரையிலும், ரஜினி மீதும் ஷ்ரேயா மீதும் விழுவது நன்றாக தெரியும்.

கண்ணா ஓவர் பில்டப் ஒடம்புக்காவாது. உஹா ஹாஹா........

ஆர்.கே.சதீஷ்குமார் said...

//ஆனா ரஜினி படம் வரும் வரைக்கும் மர்ம யோகியை கண்டுக்க மாட்டாங்க :)//
கமல் எடுத்த ஒன்றரை நிமிஷம் ட்ரைலருக்கே எவ்வளவு பில்ட் அப் இருந்துச்சு.. உங்க பிளாக் பேரே அது தான். நீங்க ரஜினி படத்தை பத்தி டென்ஷனாகறீங்க :)//
;-))

ஆர்.கே.சதீஷ்குமார் said...

//ஒருத்தரை உயர்த்த, என்னைக்கும் இன்னொருவரை தாழ்த்தி பேசாதீங்க. அதன் பெயர் வயித்தெறிச்சல், பொறாமை தவிர வேறு ஒன்றுமில்லை.//
super,very good

Arun as Butterfly said...

இந்தியாவும் விடுதலைபுலிகளும்

சென்ற வாரம் வழக்கம் போல விடுதலை புலிகளுக்கும் சிங்கள் ராணுவத்திற்க்கும் நடந்த சண்டையில் இரண்டு இந்தியர்கள் காயமாம் .

இலங்கை பிரச்சனை என்பது இடியாப்ப சிக்கல்களை விட மிக மிக சிக்கலானது. கூடவே அங்கு நடக்கும் போராட்டம் அல்லது வன்முறை யாருக்காக என்பதும் படு படு குழப்பமானது..


தமிழ் மக்களுக்காகவா??

அப்ப ஏன் இந்தியாவில் இருந்து பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து அழைத்து செல்லபட்ட கூலி தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து அந்நாட்டின் அந்நிய செலாவாணியை உயர்த்தினார்களே..அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா???

அப்போது எல்லாம் ஏன் சண்டை வரவில்லை??


அந்த தேயிலை தொழிளார்கள் நிலை அடிமைக்கு கீழான நிலை..அவர்களுக்கு எந்த வித உரிமையும் கிடையாது ..ஓட்டுரிமை உட்பட.

அவர்களை சில பேரை தந்திரமாக இந்தியாவிற்க்கு திரும்ப அனுப்ப இலங்கை அரசாங்கம் முடிவு செய்த போது அதற்க்கு ஒத்து ஓதியது இந்த யாழ்பாண தமிழர்களே ...அல்லது இவர்களால் தேர்ந்து எடுக்கபட்டவர்கள்..

இன்று கூட மலையக தமிழர்கள் என்று அழைக்க படும் அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று தெரியவில்லை..

தமிழ் ஈழம் உருவானால் யாழ்பாண தமிழர்களுக்கு நிகரான மக்கள் தொகையில் இருக்கும் இவர்கள் கதி என்ன??


இந்த தமிழ் விடுதலை இயக்கங்கள் தோன்றியத்ற்க்கு காரணம் என்வென்றால் இட ஒதுக்கீடு என்ற அரசின் நிலை...அதை நேரம் கிடைத்தாம் பின் பேசலாம்..

ராஜீவ் படுகொலை.. பத்மநாபா முதல் அமிர்ந்தலிங்கம் வரை கொன்ற மாவீரர்கள் இவர்கள்..

இந்திய படைகளை பின்னால் இருந்து தாக்கிய கோழை புலிகள்..

சரி உங்களை தினமும் எவனோ ஒருவன் யார் என்ற முகம் தெரியாமல் சொல்லி கொள்ளாமல் பின்னால் இருந்து உங்களின் நடு மண்டையில் கல் எரிந்தால் என்ன செய்வீர்கள்??

காக்க போன ரானுவத்தை எதிரிகளாக ஆக்கிய மிக பெருமை இந்த புலிகளுக்கு உண்டு. பின்னால் இருந்து தாக்குவது வீரமாம்.. அதுவும் தற்கொலை படை எல்லாம் வீர காவியவாம்

பிரபாகரன் மகன் அலல்து மகளை எல்லாம் இப்படி தற்கொலை படை ஆக விட வேண்டியது தானே.. ஏன் அவர்களுக்கு மட்டும் லண்டனில் சொகுசு வாழ்க்கை??


சரி அப்ப என்னதான் முடிவு??

விடுதலைபுலிகளை அழிக்க யாராலும் முடியாது....உலக தமிழ் அகதிகளின் எண்ணிக்கை பெருக பெருக அவர்கள் பலம் பெருக தான் செய்யும்.. கூடவே நார்வே ஒத்தாசை செய்த கதை நினைவுக்கு வருகிறது. ஒஸ்லோவில் சட்டம் ஒழுங்கு நிலை படு மோசம்

காரணம் யார் .. நம்ம இலங்கை தமிழ் காரர்கள் தான்..

சரி இந்த பிரச்சனை தீர்ந்தா அப்படியே எல்லா அகதி என்று சொல்லி வந்தவங்களை எல்லாம் அனுப்பி வைத்து விடலாம் என்ற தன் உள் நாட்டு குழப்பத்தில் தான் நார்வே உதவிக்கு வந்தது..

பணக்கார அகதிங்க எல்லாம் ஐரோப்பாவுக்கு தான் போறாங்க..ஏழை அகதிங்க இந்தியாவிற்க்கு வராங்க..

ஏங்க சார் ..ஏன் சார் அகதி என்பது உயிர் பிழைக்க தஞ்சம் கேட்பது.. ஏன் உங்க ஆளுங்க எல்லாம் பணக்கார நாடுகளுக்கே உயிரி பிட்சை கேட்க்கறீங்க??? இணையங்களில் சம்ம டக்கரா தமிழ் புலின்னு கலக்கிறீங்க..

ஏங்க அகதின்னு ஓடுறீங்க உங்களூக்கு ஏன் பணக்கார நாட்டுக்கு ஓடுறீங்க,,சோமாலியா எத்தியோப்பியாவிக்கு எல்லாம் அகதியா போக வேண்டியது தானே??



இந்த போரை காட்டி புலம் பெயறந்தவர்கள்.. அதாவது வேலை தேடி வெளிநாட்ட்க்கு குறுக்கு வழியில் சென்றவர்கள் இருக்கும் வரை இந்த போர் ஒயாது..

இந்தியாவின் நிலை என்ன?


தமிழ் நாட்டின் தென் பகுதியில்

கல்பாக்கம், கூடங்குளம் தொடங்கி திருவனந்தபுரம் வரை பல நாட்டின் முக்கியதுவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. இந்த இடங்களை எல்லாம் அன்னிய நாட்டு அரசுகள் வேவு பார்க்க அனுமதிக்க கூடாது. கூடவும் இந்த இடங்களில் அந்நிய நாடுகளின் பார்வையும் பட கூடாது..

விடுதலைபுலிகளும் சிங்கள் ரானுவமும் இரு தரப்பும் நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை..

சிங்கள் தரப்பு தொடர்பாக நமக்கு ஏற்கனவே தெரியும்

விடுதலைபுலிகள் தரப்பும் அப்படியே

அவர்களின் தமிழ் துரோக கொலைகள் எல்லாம் நமக்கு தொடர்பில்லாது விட்டு விடுவோம்..

நாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள் இந்தியர்கள் வந்தேறிகள் என்று சொன்ன அந்த ஆண்டன் பாலசிங்கதின் வார்தைகளை மறக்க முடியுமா?

மலையக தமிழர்கள் எல்லாரும் யாழ்பாணத்திரின் அடிமைகள் என்று இன்று வரை சொல்லும் யாழ்பாண வாசி தமிழர்களின் நடப்பை திருத்த முடிய்மா?

வடக்கியத்தானை நம்பாதே ( வடக்கித்தியான் - > தமிழ்நாடு ) என்று இன்று வரை சொல்லும் இந்த முதுகில் குத்தும் இலங்கை தமிழர்களை இன்னம் ஒரு முறை நம்பி மோசம் போகலாமா?


சரி அப்ப ராடார்?

ராடார் என்பது ஆள் கொள்ளும் இயந்த்ரம் இல்லை.. வானில் பறக்கும் விமானங்களை கண்காணிக்கும் ஒரு கருவி..

அப்ப அந்த இரண்டு இந்தியர்??

அந்த ராடர்களை அங்கு இருக்கு ஆட்களுக்கு கற்று தர சென்றவர்கள்..

சரி ராடாரை இந்தியா கொடுக்காமல் இருந்தால்?

சீனா கொடுத்துஇருக்கும்.. கூடவே நம் சென்னை வரை எல்லா ஏரியாவையும் அந்த ராடார் வழியாக சொல்லி கொள்ளாமல் கண்காணிப்பார்கள்?

அப்ப என்ன தான் சொல்ல வர?

என்னை பொருத்தவரை நான் முதலில் இந்தியன்..

அதுக்கு அப்புறம் தான் இந்த அல்லைகைகள்..

இவனுங்க கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சா ....


இலங்கை பிரச்சனை என்பது எந்த தீர்வும் அற்றது. கண்டுக்காம போ.. அவங்க இரண்டு தரப்பும் சண்டையை ஒரு நாளைக்கும் நிறுத்தாது.. இதில் தமிழ் தமிழர்ன்னு உன்னை நீயே குழப்பிகிட்டா அதற்க்கு யாரும் பொறுப்பில்லை..

Anonymous said...

ரஜினி லிப்ஸ்டிக் போட்ட மாதிரி இருக்கு!

நண்பர்கள்

Blog Archive