அமெரிக்காவில் ஒரு பாடிகாட் முனீஸ்வரர்
சென்னையில் இருந்தவர்களுக்கு, அவர்கள் வட சென்னை பக்கம் போயிருந்தால் பாடிகாட் முனீஸ்வரர் கோவிலை கண்டிப்பாக மிஸ் செய்து இருக்க முடியாது. இந்த கோவிலை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் பயணம் இனிதே அமைய பாடிகாட் முனீஸ்வரரை வணங்கிச் செல்வதுண்டு. இந்த கோவில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இருக்கிறதாம். பாடிகார் முனீஸ்வரர் சென்னையில் இருப்பது தெரிந்த விஷயம் தானே என்று சொல்கிறீர்களா. கடந்த வாரம் லாங் வீக்கென்டு ஆனதால் நானும் கிளம்புகிறேன் பேர்வழி என்று கிளம்பியாச்சு. தசாவதாரம் படத்தில் கமல் ஜார்ஜ் புஷ் வேடம் போட்டதில் இருந்தே வாஷிங்டனுக்கும் போக வேண்டும் என்று நினைத்து இருந்தேன். அந்த ஆசை ஒரு வழியாக நிறைவேறியது. போகும் வழியில் போலிஸ் மாமா எனக்கு முன்னால் சென்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு என்னை மறித்து "தம்பி, வேகமா போகாதே பார்த்து போ!!" அன்பாக சொல்லி அனுப்பினார். வாஷிங்டொன் போய் வெள்ளை மாளிகை, கேபிடல் ஹில் எல்லாம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் தான் அந்த போர்டு கண்ணில் பட்டது. "Lady of the Highway" என்று கொட்டை எழுத்தில் எழுதி இருந்தது. அதை பார்த்தவுடன் எனக்கு நம்மூர் பாடிகாட் முனீஸ்வரர் தான் நினைவுக்கு வந்தார். நான நினைத்தது போலவே இணையத்தில் "Lady of the Highway" பற்றி தேடிய போது இந்த சாமியும் அல்லது மாதாவும் வாகன ஓட்டிகளின் பாதுகாவலர் என்று தெரிந்தது
இணையத்தில் மேலும் தேடியதில் பெங்களூருவிலும் இதே மாதிரி "வாஹன காளி அம்மன்" கோவில் ஒன்று உள்ளதாம். இதுவும் வாகன ஓட்டிகளை பாதுகாக்க தானாம். சென்னையோ, பெங்களூருவோ, அமெரிக்காவோ, இந்து மதமோ, கிறுத்துவமோ எதுவானாலும் மக்களின் உணர்வுகள் எல்லாம் ஒன்றே என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமோ???a

1 comments:
//தம்பி, வேகமா போகாதே பார்த்து போ//
சீட்டு தராம சொல்லிருக்காரேன்னு சந்தோசப் பட்டுக்கோங்க :)
Post a Comment