Tuesday, August 05, 2008

சிங்கப்பூர் என்னும் சொர்க்கம்



சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு உகந்த இடங்களில் சிங்கார சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை அமெரிக்காவும், அமீரகமும் பங்கிட்டுக் கொண்டுள்ளன. Forbes பத்திரிக்கை நடத்திய ஆய்வின் முடிவு தான் இது. வெளிநாட்டினர் வேலை பார்க்க விரும்பும் இடங்களின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் வாழ்க்கை தரம் குறைவாக இருப்பது ஒரு குறையாக சொல்லப்பட்டு இருக்கிறது

சிங்கப்பூரின் தட்பவெட்ப நிலையையும் அதன் கடுமையான சட்ட திட்டங்களையும் பொருட்படுத்தவில்லை என்றால் வேலை செய்வதற்கு சிங்கப்பூர் தான் சிறந்த இடம் என்று Forbes பத்திரிக்கை சொல்கிறது. மேற்சொன்ன இரண்டு காரணங்களும் மேல் நாடினருக்கு தான். இந்தியர்களாகிய நமக்கு மேற்சொன்ன காரணங்கள் ஒரு பொருட்டல்ல. நம்மூர் வெயிலுக்கு சிங்கப்பூர் வெயில் சும்மா ஜுஜுபி. சிங்கப்பூரில் சட்ட திட்டங்கள் கடுமையாக இருப்பது இந்தியர்களுக்கு நன்மை தான் பயக்கும் என்பது என் கருத்து. அரபு நாடுகள் பாணியில் பெண்களிடம் அத்துமீறியோ அல்லது வரம்பு மீறியோ நடந்து கொண்டால் பிரம்படி, போதை பொருள் வைத்து இருந்தால் மரண தண்டனை போன்ற சட்டங்கள் மேல் நாட்டினருக்கு பேதியை கிளப்பி இருக்க வேண்டும்

நாம் சிங்கப்பூரை விரும்புவதை போலவே சிங்கப்பூரும் இந்தியாவை மிகவும் விரும்புகிறது. சிங்கப்பூரின் அதிகாரம் மிக்க முதலீட்டு நிறுவனமான டெமாசிக் ஹோல்டிங்க்ஸ் இந்தியாவில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளது. மற்றொரு முக்கியமான விஷயம் சிங்கி பெண்கள் இந்திய ஆண்களை மணந்து கொள்வது அதிகரித்து வருகிறதாம். இது சிங்கப்பூர் தொலைக்காட்சியின் தமிழ் சேனலில் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம். என்னுடன் பணியாற்றிய ஒரு சக இந்தியர் கூட சிங்கியை தான் மணந்து இருக்கிறார்

இவ்வளவு சொன்ன நீ ஏன்டா சிங்கப்பூரை விட்டு போனாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நீங்கள் கேட்பது போலவே எனது மனசாட்சி அடிக்கடி கேட்பது போலவே என் நண்பரும் கேட்டார். அதற்கு நான், "அண்ணே! நாங்க இளைய தலைமுறைக்கு வழி விடுறோம்ணே" என்றேன். பதிலுக்கு அவர் "வர வர உனக்கு அரசிய்ல சகவாசம் ஜாஸ்தியா போச்சுடா" என்றார்

10 comments:

கிரி said...

வாங்க மருதநாயகம். சிங்கப்பூர் பற்றி பல சுவாராசியமான விசயங்களை கூறி இருக்கீங்க..இன்னும் கொஞ்சம் சேர்த்து கூறி இருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்து இருக்கும்.

கொஞ்ச நாளா ஆளை காணோம்.

ILA said...

தம்பி, இது ரத்த பூமி. வேணாம்..

முரளிகண்ணன் said...

\\மற்றொரு முக்கியமான விஷயம் சிங்கி பெண்கள் இந்திய ஆண்களை மணந்து கொள்வது அதிகரித்து வருகிறதாம்\\

good news

கோவி.கண்ணன் said...

உள்ளேன் ஐயா.

ஜோசப் பால்ராஜ் said...

நல்ல பதிவு .

//"அண்ணே! நாங்க இளைய தலைமுறைக்கு வழி விடுறோம்ணே" என்றேன். பதிலுக்கு அவர் "வர வர உனக்கு அரசிய்ல சகவாசம் ஜாஸ்தியா போச்சுடா"//

எந்த அரசியல்வாதிங்க இந்தியால இளைய தலைமுறைக்கு வழிவிட்டுருக்காங்க? இதெல்லாம் நகைச்சுவையா தெரியலை ?

KALAIYAGAM said...

துப்பரவுப்பணி முதல் வைத்தியம் வரை எந்த வேலை என்றாலும், இந்தியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் குறைவு, அதற்காகவே வேலைக்கு எடுக்கிறார்கள் என்ற உண்மையையும் சொல்லியிருந்தால் நல்லது.

-KALAIYAGAM-
http://kalaiy.blogspot.com

Sathiya said...

உண்மையிலேயே ரொம்ப அழகான, முக்கியமா சௌகரியமான ஊருங்க!

//துப்பரவுப்பணி முதல் வைத்தியம் வரை எந்த வேலை என்றாலும், இந்தியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் குறைவு, அதற்காகவே வேலைக்கு எடுக்கிறார்கள் என்ற உண்மையையும் சொல்லியிருந்தால் நல்லது.//
எனக்கு தெரிந்து இந்த மாதிரி இந்தியாவில் இருந்து வேலைக்கு எடுப்பவர்கள் நாய் படாதா பாடு படுவது மலேசியா மற்றும் அரபு நாடுகளில் தான் அதிகம். நம்ம மக்கள் என்ன ஏதுன்னு தெரியாம போயி மாட்டிட்டு தவிக்கறாங்க.
சிங்கப்பூர்ல அந்த மாதிரி எதுவும் எனக்கு தெரிஞ்சி இல்ல. நான் பார்த்து பல கட்டட தொழிலாளிகள் இங்கு பத்து வருடங்களாக சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சம்பளம் என்னவோ அதிகம் கிடையாது. ஆனால் அதே சம்பளம் தான் இந்தோனேசியா மற்றும் பிலிபைன்ஸ் மக்களுக்கும்.

வடுவூர் குமார் said...

3000 வெள்ளி சம்பளம் கொடுக்கும் வேலை இருந்தால் (வருடம் முழுவதும்) சாதாரண வாழ்கைக்கு போதும்,சேமிப்பும் இருக்கும்.
உண்ண உணவு
இருக்க இடம்
உடுத்த உடை இவையாவும் மேற் சொன்ன சம்பளத்தில் நிறைவாகவே கிடைக்கும்.அதோடு சுத்தமான காற்று இருக்கும் போது மருத்துவரை அடிக்கடி சென்று பார்க்கவேண்டிய அவசியமும் கிடையாது.நம்மூர் புகையை அதிகமாக இழுத்திருக்கும் நுறையீரல் இங்கு வந்து இன்னும் நல்ல காற்றை உள்ளிழுத்துக்கொள்ளும்.
இப்படி பல நல்லவை இங்கு உள்ளன.
பொதுவான வாழ்கை வாழும் போது சட்டதிட்டங்களால் பெரிதும் பாதிப்பில்லை.
பலருமே புறாக்கூண்டில் தான் இருக்கிறோம் இருந்தாலும் எதிரியாக பார்க்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
என்ன..
சிரங்கூன் சாலையை வார இறுதியில் உபயோகிக்கும் வாகனமோட்டிகள் கொஞ்சம் வருத்தப்படும் அளவுக்கு சிலர் நடந்துகொள்கிறார்கள்.

மருதநாயகம் said...

வருகைக்கு நன்றி வடுவூர் குமார். வளைகுடா செல்ல ஆயத்தமாகி வருவதாக அறிந்தேன். உங்கள் எதிர்கால திட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

வடுவூர் குமார் said...

நன்றி மருதநாயகம்.

நண்பர்கள்

Blog Archive