Thursday, July 03, 2008

மரித்துவிட்ட மனிதநேயம்

சேவியர் ஒரு பதிவு எழுதி இருந்தார் அமெரிக்கா : மனிதநேயம் ன்னா என்ன ? நான் விரும்பி படிக்கும் வலைப்பதிவுகளில் சேவியரின் பதிவுகளும் உண்டு. ஆனால் சேவியர் சொல்வது போல் இந்த விஷயத்தில் அமெரிக்காவை மட்டும் குறை சொல்ல முடியாது. உலகம் முழுவதுமே மனிதநேயம் என்பது அரிதாகி வரும் விஷயமாகிவிட்டது. அவரே கூட தன்னுடைய வலைப்பூவில் தன் நண்பரின் வயதான தந்தைக்கு நம்ம ஊரில் நேர்ந்த துயரமான சம்பவம் பற்றி மிகவும் வருத்தத்துடன் ஒரு பதிவை எழுதி இருந்தார் இதெல்லாம் ஒரு பொழப்பா … த்தூ…. இதே போல் நாம் செல்ல விரும்பும் மற்றொரு முக்கியமான நாட்டில் வேலை செய்யும் என் நண்பன் சாலையில் அடிபட்டு கிடந்த போது ஒருவரும் உதவ முன்வரவில்லை என்று சொன்னான். பல விஷயங்களில் முன்னோடியாக இருக்கும் அமெரிக்கா இதிலும் முன்னோடியாக இருக்கலாம் அல்லது எல்லா விஷயங்களிலும் அமெரிக்காவை பின்பற்ற விரும்பும் உலகம் இதிலும் பின்பற்றலாம்

மரித்து்விட்ட மனிதநேயத்துக்கு மேலும் ஒரு சான்று இந்த வீடியோ. அமெரிக்காவின் முக்கியமான நகரம் ஒன்றில் சாலையை கடக்க முயலும் ஒரு பெரியவரை கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் மோதி தூக்கி வீசிவிட்டு போகிறது ஒரு கார். அதை தொடர்ந்து வரும் மற்ற கார்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கூட நின்று பார்க்க தயங்குகிறார்கள். எதுவும் செய்ய முடியாமல் காவல்துறையே இறுதியில் இணையத்தின் உதவியை நாடி இருக்கிறது

7 comments:

இவன் said...

மனது கனத்த சில நொடிகள்.... நாங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் மருது.... மற்றவர்கள் மாதிரியே வேடிக்கைதான் பார்த்திருப்போம்..... ஒன்றும் செய்ய முடியாது மனிதன் வர வர் இயந்திரம் ஆகிக்கொண்டே போகிறான்

ILA said...

காலம் என்னும் சின்ன வட்டத்துக்குள்ள நாம சரியா மாட்டி இருக்கோம்னு பதில் சொல்ற கேவலமான நிலமையில நாம் இருக்கோம் போல

கோவி.கண்ணன் said...

:(

//மரித்து்விட்ட மனிதநேயத்துக்கு//

எல்லா நாடுகளில் இருப்பதும் மனிதன் தானே !!!

******

செய்திக்கு ஆறுதலாக அந்த வீடியோ தொகுப்பில் ஒரு படம் இருக்கு ! (அது கவர்ச்சிப்படம் மங்களூர் சிவாவுக்கான சிறப்பு தகவல்)

மருதநாயகம் said...

//செய்திக்கு ஆறுதலாக அந்த வீடியோ தொகுப்பில் ஒரு படம் இருக்கு ! (அது கவர்ச்சிப்படம் மங்களூர் சிவாவுக்கான சிறப்பு தகவல்)//

உங்க கண்ணுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தெரியுது

சேவியர் said...

//நான் விரும்பி படிக்கும் வலைப்பதிவுகளில் சேவியரின் பதிவுகளும் உண்டு. //

ஆஹா... பெருமைப்படுத்திட்டீங்களே :) நன்றி

//

ஆனால் சேவியர் சொல்வது போல் இந்த விஷயத்தில் அமெரிக்காவை மட்டும் குறை சொல்ல முடியாது. உலகம் முழுவதுமே மனிதநேயம் என்பது அரிதாகி வரும் விஷயமாகிவிட்டது.//

உண்மை. குறிப்பாக சாலை விபத்துகளில் உதவுவதில் அமெரிக்க காவல் துறையும், அவசர சேவை 911 ம் - பெருமளவு நம்பிக்கை தருகின்றன.

Anonymous said...

//செய்திக்கு ஆறுதலாக அந்த வீடியோ தொகுப்பில் ஒரு படம் இருக்கு ! (அது கவர்ச்சிப்படம் மங்களூர் சிவாவுக்கான சிறப்பு தகவல்)//

பகுத்தறிவாளரில்ல புத்தி எங்க போவும்.. தூஊஊஊஊஊஊஊஊ அடுத்தவன் சாவுல கவர்ச்சி பாக்குற நீயெல்லாம் நாண்டுகிட்டு சாவலம்

King... said...

என்ன செய்வது காலம் அப்படி இருக்கிறது...:(

நண்பர்கள்

Blog Archive