Thursday, June 26, 2008

கூகிள் டிரெண்ட்ஸில் இடம் பெற்ற தசாவதாரம்

தசாவதாரத்தை எல்லோரும் புரட்டி போட்டாகிவிட்டது. கமலே கூட தன்னுடைய படம் இவ்வளவு தூரம் நுட்பமாக ஆராயப்படும் என்று எதிர்பார்த்து இருக்கமாட்டார். என்னை ஒரு வரியில் படத்தை விமர்சிக்க சொன்னால் "பிரம்மாண்டம் முதல் பிரம்மாண்டம் வரை" என்று வர்ணிப்பேன். முதல் 15 நிமிடக் காட்சிகள் பிரம்மாண்டம் என்றால் இறுதி சுனாமி காட்சிகளும் பிரம்மாண்டம் தான். இடை இடையேயும் பிரம்மாண்டத்துக்கு பஞ்சமில்லை

நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். கூகிள் தன்னுடைய தேடல் சேவையை பயணீட்டாளர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்து கொள்ளும் டிரெண்ட்ஸிலும் தசாவதாரம் இடம் பெற்று இருக்கிறது. கூகிள் நாள் வாரியாக தன்னுடைய தேடல் சேவையில் அதிகம் தேடப்பட்ட குறிச் சொற்களை பட்டியலிடுகிறது. அதன்படி தசாவதாரம் வெளியான ஜூன் 13ம் தேதிக்கு சென்று பார்த்தால் தசாவதாரம் சரியாக 100வது இடத்தில் வந்துள்ளது. அதன் ஸ்கிரீன்ஷாட் இங்கே இணைத்துள்ளேன். நீங்களும் கூகிள் வலைத்தளத்தில் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம். கமல் ரசிகர்கள் தங்களை தாங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம்

5 comments:

Anonymous said...

kalakkal. kalakkal.. kalakkal....

தமிழ்நெஞ்சம் said...

padam release aana annaikkuthane....
correct..

I visited that link.

thanks

http://www.google.com/trends/hottrends?sa=X&date=2008-6-13 ---- dasavataram is in 100th place of google trends

மருதநாயகம் said...

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி

செல்வ கருப்பையா said...

ஒரு சின்ன update. நீங்கள் பார்த்திருப்பது google.com trends என நினைக்கின்றேன். அது அமெரிக்க rating. google.co.in-ல் June-13 பார்த்தால் பல்வேறு இடங்களைப பிடித்திருப்பது தெரியும் - 9, 14, 31, 42, 44, 53, 68, 79 மற்றும் 96-ஆவது இடங்களைப் பிடித்துள்ளது. இவை அனைத்தையும் சேர்த்தால் undisputedly நம்மவர் நம்பர் ஒன்னுங்கோ. அடுத்த சில நாட்களும் தசாவதாரம் Google-ஐ dominate செய்திருப்பதைக் காணலாம்.

மருதநாயகம் said...

நன்றி செல்வ கருப்பையா. நிறைய மேட்டரா கொட்றீங்க

நண்பர்கள்

Blog Archive