Monday, May 12, 2008

தசாவதாரம்: இந்துத்வாவின் இரட்டை வேடம்

தசாவதாரம் வந்தாலும் வந்தது அதை வைத்து பல பேர் கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். தசாவதாரம் பாடலகள் ஒருபுறப் பட்டைய கிளப்பிக் கொண்டு இருக்க கலைஞர் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட டிரெய்லர் மறுபுறம் சில பேர்களின் வயிற்றில் புளியை கரைத்து கொண்டு இருக்கிறது

இந்த படம் சைவம் - வைணவம் மோதலை அடிப்படையாக கொண்ட படம் என்பதால் இந்துத்வா அமைப்புகளும் களத்தில் குதித்து இருக்கின்றன. அவர்களின் முதல் வாதம் இப்படி எல்லாம் நடக்கவே இல்லை இவை எல்லாம் கமலின் கற்பனை என்பது. மேலும் அவர்கள் இதற்கான ஆதரத்தை காட்டுமாறு கமலிடம் கேட்கிறார்கள். அது எப்படி சைவம் - வைணவம் மோதல் என்று வந்தவுடன் கற்பனை என்று சொல்லும் இவர்கள் முகாலயர்கள் ஆட்சியில் இந்துக்களுக்கு எதிராக நடந்ததாக சொல்லும் சம்பவங்களை மட்டும் புள்ளிவிவரத்தோடு சொல்ல முடிகிறது. நெருப்பில்லாமல் புகையுமா. சைவம் - வைணவம் மோதல் நடக்கவே இல்லை என்று சாதிக்கப் போகிறார்களா?

இவர்களின் அடுத்த வாதம். சைவம் - வைணவம் மோதல் எல்லாம் இந்த காலகட்டத்திற்கு பொருந்தாது என்பது. இது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே. அதே போல் முகாலயர்கள் நம் நாட்டை விட்டு போய் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டதே. அதுவும் இந்த காலகட்டத்திற்கு ஒத்து வராதே. பின் ஏன் இன்னும் அதை சொல்லி மதக் கலவரத்தை எற்படுத்தி அதை ஓட்டுக்களாக்கி குளிர் காய்கிறார்கள். சைவம் - வைணவம் மோதலை குழி தோண்டி புதைக்கப் பார்க்கிறார்கள. இந்துக்களின் ஒற்றுமைக்காக அதை மறைக்கப் பார்க்கிறார்களா? அதே மாதிரி இந்தியரகளின் ஒற்றுமைக்காக முகாலய ஆட்சியின் நிகழ்வுகளையும் மறைத்துவிடலாமா?

பாபர் இடித்தார் என்று சொல்லி ஒரு மசூதியை இடித்து அதனால் பல்லாயிரம் உயிரை குடித்தார்களே. கோவில்களை இடித்தது பாபர் மட்டும் தானா? இன்னும் கொஞ்சம் பின்னே சென்று சைவம் - வைணவம் மோதலில் எத்தனை கோவில்கள் பாதிக்கப்பட்டன என்றும் இவர்கள் பார்க்கலாமே

4 comments:

தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்மீதும் நிலவட்டுமாக.

இந்த பார்ப்பணர்களின் செறுப்பு பாரதத்தையே ஆண்டது என்று அவர்கள் சொல்லும் கதைகளில் உள்ளது. அதனால் மிகவும் புனிதமான ஒரு பொருளால் இந்த பார்ப்பனியத்தை அடித்ததால் மருதநாயகமே உங்கள் மீது சற்று வருத்தமே. இருப்பினும் என்ன விலை கொடுத்தாகிலும் உண்மையை சொல்லிவிடவேண்டுமென்பது முக்கிய மென்பதால் உங்கள் பதிவுக்கு என்னால் முடிந்த பாராட்டுக்கள். நன்றி
Visit: www.q8tmmk.blogspot.com

Kalaiyagam said...

Well done. Thank you for exposing hipocrisy of Hindu fundamentalists.

-Kalaiyagam
http://kalaiy.blogspot.com

ILA said...

தோடா.
யாரை எப்போ அடிச்சா பேர் வாங்கலாம்னு சிலபேர்க்கு நல்லாவே தெரியும்ல

Anonymous said...

என்ன ரவி உடன்பிறப்பு ஐடியில் நீங்கள் பார்பனர்களை திட்டுவது போலத்தான் இதுவும். :)))))))))

நண்பர்கள்

Blog Archive