எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அகாதமி விருது
என்னதான் திரைப்படங்களில் இருந்து விலகினாலும் அல்லது விலக்கப்பட்டாலும் எழுத்தாளர் ஜெயமோகன் செய்திகளில் இருந்து விலக்மாட்டார் போல் தெரிகிறது. அவர் எழுத்து துறையில் ஆற்றிய அரும்பணிக்காக அவருக்கு விருது வழங்கப்படுகிறது
தமிழ் வலையுலகில் எழுதும் முக்கிய எழுத்தாளர்களில் குறுகிய காலத்திலேயே அதிகம் பிரபலமானவர் ஜெயமோகன் என்றால் அது மிகையல்ல. அவர் எழுதிய பல பதிவுகள் ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னும் ஓய்ந்த மாதிரி தெரியவில்லை. பரபரப்புக்கும் பிரச்சினைக்கும் ஜெயமோகனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவரின் சில பதிவுகளால் சினிமா துறையின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டாலும் அவர் தொடர்ந்து சினிமாவில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்.
எழுத்தாளர் ஜெயமோகனின் பணிக்காக அவருக்கு தமிழ் வலையுலகத்தின் சார்பில் அகாதமி விருது வழங்கப்படுகிறது. இது குறித்து பேசிய அவர் தான் இந்த விருதை பெறுவதற்கு மிகவும் பெருமைப்படுவதாக தெரிவித்தார். அவரின் இந்த பேட்டியின் போது நம் வலையுலகின் மூத்த பதிவரும் தமிழ் வலையுலகின் முன்னோடியுமான சிறில் உடன் இருந்தார்.
மேலும் இணையத்தில் கருத்து சுதந்திரத்துக்காக குரல் கொடுத்துவரும் இன்னும் சில மூத்த பதிவர்களும் இந்த விருது வழங்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனர்
இது வெறும் ஏப்ரல் ஃபூல் மற்றும் மொக்கைப் பதிவுதான். மேலும் இந்த பதிவுக்கு பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்

3 comments:
//தமிழ் வலையுலகின் முன்னோடியுமான சிறில் //
உண்மையிலேயே இதுதான் ஏப்ரல் ஃபூல் செய்தி. நடத்துங்க.
:)
வருகைக்கும் பின்னூட்டத்தை தொடங்கி வைத்ததற்கும் மிக்க நன்றி சிறில்
கலக்கல்! :-)
////சிறில் அலெக்ஸ் said...
//தமிழ் வலையுலகின் முன்னோடியுமான சிறில் //
உண்மையிலேயே இதுதான் ஏப்ரல் ஃபூல் செய்தி. நடத்துங்க.
:)
/////
இதுலே என்னாங்க ஏப்ரல் ஃபூல் இருக்கு. நெஜத்தை தானே சொல்றாரு? என்ஜாய்!!!
Post a Comment