Taare Zameen Par: 100 கோடியில் படம் எடுப்பவர்கள் சிந்திப்பார்களா?
சிவாஜி என்றொரு படம் வந்தது. அதற்கு தான் எத்தனை பில்டப். ஐந்து பைசா தேறாத கதைக்கு ஐம்பது கோடி பட்ஜெட்டாம். படத்துக்கு பெயர் வைப்பதில் இருந்து, நாயகன் தலை அலங்காரம் வரை உப்பு பெறாத விஷயங்கள் எல்லாம் பத்திரிக்கைகளில் முதல் பக்கம் இடம் கொடுக்கப்பட்டது. இத்தனை ஆர்பாட்டம் செய்து என்ன கழட்டினார்கள் என்பது இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. படத்தில் கிராபிக்ஸ் ரஜினி படங்களில் ஒன்றும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்றாலும் ரியல் டைம் அனிமேஷன், மார்பிங் என்று தன் படங்களில் கலக்கிய ஷங்கருக்காகவாவது படம் பார்க்கலாம் என்று போனால் அவருக்கும் ரஜினி மேனியா ஒட்டிக் கொண்டது போலும். கருப்பை வெள்ளை ஆக்குகிறேன் பேர்வழி என்று கிராபிக்ஸ் இஞ்சினியர்களையே இழிவுபடுத்திவிட்டார்கள். படத்தில் ரஜினி வெள்ளை ஆனதால் யாருக்கு என்ன லாபம். சரி இபோது மேட்டருக்கு வருவோம். இவர்கள் அடுத்து 100 கோடிக்கு படம் எடுக்கப் போகிறார்களாம்
100 கோடியை வைத்து இந்த சமுதாயத்துக்கு உருப்படியாக ஏதாவது செய்யலாம் என்று இவர்கள் நினைத்தால் அமீர் கான் நடித்து இயக்கிய படமான தாரே சமீன் பர் போல் ஏதாவது நல்ல விஷயமாக தங்கள் படம் மூலம் எடுத்து சொல்லட்டும். தாரே சமீன் பர் படத்துக்கு பின்னால் 10 ஆண்டு கால உழைப்பு இருக்கிறதாம். அதில் அமீர் தான் ஒரு கருவி தான் என்று ஒத்துக் கொண்டுள்ளார். இப்படி ஒரு படத்தை தானே தயாரிக்க முன் வந்த அவர் தைரியத்தில் ஒரு பங்காவது ஐஸ்வர்யா ராயுடன் நடிப்பதை மட்டுமே தனது 10 ஆண்டு கால குறிக்கோளாக கொண்டுள்ளவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு மிக நல்ல படத்தை கொடுத்துவிட்டு அதற்கு எந்த வித பில்டப்பும் கொடுக்காமல் சொல் வார்த்தை மூலமே படத்தை ஹிட் ஆக்கிய அமீர் கானுக்கு வாழ்த்துக்கள். இவரை பார்த்தாவது தமிழ் சினிமா சூப்பர்கள் சிந்திக்கட்டும்
இவ்வளவு சொல்லிவிட்டு படத்தை பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டால் அது பெரிய தவறாகி விடும். படத்தின் கதை மாற்றுத் திறன் கொண்ட ஒரு மாணவனைப் பற்றியது. படத்தின் நாயகனும் அவன் தான். படம் முழுக்க அவன் தன் சீரிய நடிப்பால் ஆக்கிரமித்துவிடுகிறான், நம் மனதையும் தான். அவனுடைய திறமையை பெற்றோர் உட்பட யாருமே புரிந்து கொள்ளாத நிலையில் அவனுக்கு நம்பிக்கை ஊட்டும் ஆசிரியராக இடைவேளை நெருங்கும் போது தான் தோன்றுகிறார் அமீர் கான். படத்தில் நாயகியே இல்லை. தன் மகள் வயதை விட குறைந்த வயது நடிகைகளை தன் ஜோடியாக்க விரும்பும் தமிழ் சினிமா பெரிசுகளுக்கு அமீர் கான் மெய்யாலுமே வேற்று கிரகத்து ஆள் மாதிரி தான் தோன்றுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

16 comments:
//தன் மகள் வயதை விட குறைந்த வயது நடிகைகளை தன் ஜோடியாக்க விரும்பும் தமிழ் சினிமா பெரிசுகளுக்கு//
இது கமலுக்கும் பொருந்துமா?
//இது கமலுக்கும் பொருந்துமா?//
ஆம் இது அவருக்கும் தான். ஆனால் அவராவது தோற்றத்தில் இளைஞராக இருக்கிறார் அதை மெயின்டெயின் செய்கிறார் ஆனால்...
good post..
naanum kamal vimarsahan than. kamalukum porunthum..summa pla koodikalil padam edupathivida..ipadiyana muyarchikalil,,kamal inum alamaha eedupada veendum...
/*எல்லாம் பத்திரிக்கைகளில் முதல் பக்கம் இடம் கொடுக்கப்பட்டது. இத்தனை ஆர்பாட்டம் செய்து என்ன கழட்டினார்கள் என்பது இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. */
ஷ்ரேயா துணியைதான் கழற்றினார்கள். நீங்க கவனிக்கலையா ?
இவனுங்க வேஸ்ட். எடுக்குற படத்தையே கொஞ்சம் புத்திசாலித்தனமா கூட எடுக்க தெரியாது. ஏதோ அச்சு பிச்சுன்னு எடுப்பானுங்க.
பழனி படம் பாருங்க பேரரசு ஒரு புது ரவுசு. நான் கமர்ஷியல் இயக்குனர்னு சொல்லி கண்டதயும் எடுத்து.. கொடுமை. இதுல பரத் மூஞ்சிக்கு பஞ்ச் டயலாக் வேற.
Mr. Marudanayakam,
Valid point. But pls tell Dr. Kamal about it. He always feels that good movies need big budget. He is not completing Marudanayakam due to requirement of big investment.he had capabilities but does not beleive in creating good, socially relevant and positive movies in small budgets.
Most of the Rajini movies are produced in low budget except Sivaji. But Kamal did many "Alavandan" equivalents which robbed the peace and happiness of producers.
Kamal needs to learn a lot from the success of movies like "tare zameen par" as he always equates good movies to gory, pessimistic stories like Mahanathi.
Rajkumar
தல,
ரொம்ப சூடா இருக்கீங்க.. நல்ல கருத்தா தான் சொல்லி இருக்கீங்க..
//ஆம் இது அவருக்கும் தான். ஆனால் அவராவது தோற்றத்தில் இளைஞராக இருக்கிறார் அதை மெயின்டெயின் செய்கிறார் ஆனால்...//
இது தானே வேணாங்கிறது.. தப்புன்னா யார் செஞ்சாலும் தப்பு தான். கமலோட பராமரிப்பை வேட்டையாடு விளையாடு படத்தோட க்ளோசப் காட்சிகளில் பார்க்கலாமே?
அழகான பதிவு. வாழ்த்துக்கள்.
@rajkumar
தலைவரே கமலும் TZP மாதிரி தான் "நம்மவர்" எடுத்தார். நீங்க என்ன பண்ணீங்க???? அதுவும் லோ பட்ஜெட் தான் இன்னிக்கு இல்லை 10 வருசம் கழிச்சு பாத்தாலும் அட போட வைக்கும் படங்கள் அவை. சோ கமலை ரஜினியோட தயவு செய்து ஒப்பிடாதீர். ரஜினி படங்கள் 2 வருடம் கழித்து பாருங்கள் நீங்கள் லொல்லு சபா பார்ப்பதையே நிறுத்திவிடுவீர். ஒப்புக்கொள்கிறேன் கமலுக்கும் வயது பொருந்தும் ஆனால் திறமை என்று ஒன்று இருக்கிறது அதை நீங்கள் கவனிப்பதில்லை. முன்னா பாய் ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால் "Get well soon"
சரியாச் சொன்னீங்க. இரானிய இயக்குனர்களுக்கு சவால் விடும் வகையில் இருந்தது Taare zameen par. நிற்க. சிந்திச்சா இவங்க ஏங்க 100 கோடியில படம் எடுக்க போறாங்க? வெளி நாட்டு காரர்கள் Taare zameen par பார்த்துட்டு தட்டி கொடுத்துட்டு சிவாஜி பார்த்து தலையில அடிச்சிக்குவாங்க.
//ஷ்ரேயா துணியைதான் கழற்றினார்கள். நீங்க கவனிக்கலையா ?//
:-)
am accepting that Taare Zameen Par is good but same time. Sivaji movia vachu enna kilikkala ? enna kilichu erukanum nu nenaikara ?
//am accepting that Taare Zameen Par is good but same time. Sivaji movia vachu enna kilikkala ? enna kilichu erukanum nu nenaikara ?//
அனானி! இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்வு இருக்கக் கூடாது. உங்களுக்கு மன்சாட்சி என்று ஒன்று இருந்தால் இப்படி எல்லாம் சொல்லமாட்டீர்கள்
//100 கோடியில் படம் எடுப்பவர்கள் சிந்திப்பார்களா?"//
மாட்டார்கள். அது வேறு. இது வேறு. ஆரஞ்சு பழங்களையும் ஆப்பிள்களையும் ஒப்பிடாதீர்கள்.
Taare Zameen Par மாதிரி 10 படம் தொடர்ந்து வந்தால் திகட்டிவிடும். ரசனைக்கு அதுவும் வேண்டும் சிவாஜியும் வேண்டும். (திருத்தணியும் வேணுங்கிறீங்களா, ரொம்ப சரி!)
அவ்வளவுதான் விஷயம். சில்லுனு ஒரு கிளாஸ் தண்ணி குடிங்க, சரியாப் போயிடும் :-)
நன்றி அனானி அவர்களே! வெளிவரும் எல்லா படங்களுமே தாரே சமீன் பர் மாதிரி இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் கொஞ்சமாவது மனசாட்சியோடு படம் எடுக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன். அடுத்த படத்துக்கு கூட ஐஸ்வர்யாவை ஜோடியாக்குவதிலும், 100 கோடியிலுமே தான் குறியாக இருக்கிறார்களே தவிர உருப்படியாக எதுவும் செய்யப் போவதாகத் தெரியவில்லை
தகவலுக்கு நன்றி. நீங்க பதிவெல்லாம் கூட போடுறீங்களா?
சிவாஜியெல்லாம் உங்காள் எடுத்த ஆளவந்தான் மாதிரி அமர காவியத்தோட மோத முடியுமா ;) தசாவதாரம் வரட்டும், ஆளவந்தானையும் மிஞ்சிவிடும். சும்மா மூஞ்சில ரப்பார் ஒட்டி மேக்கப் போடுவதற்கும் ரஜினி வெளுப்பானதுக்கும் பெரிய வித்தியாசம் ஒண்ணுமில்ல.
what a great post?
Post a Comment