"கன்னி"யர்களுக்கு இலவச சினிமா டிக்கெட்
ஒரு ஆணோ பெண்ணோ கன்னியாக இருந்தால் சினிமா பார்க்க இலவச டிக்கெட் தருகிறார்கள். இங்கல்ல அமெரிக்காவில். அமெரிக்காவில் நேற்று வெளிவந்த திரைப்படம் ஒன்றிற்கு வருபவர்கள் தாங்கள் இன்னும் "எதுவும்" செய்யாமல் கன்னியாகவே இருப்பதாக சொன்னால் அவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கி இருக்கிறார்கள்
My First Time என்ற ஆங்கில படத்திற்கு தான் இந்த ஏற்பாடு. படத்தின் தலைப்பை கேட்ட உடனேயே இது ஏதோ வில்லங்கமான படம் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும். தங்களுடையை முதல் "அனுபவத்தை" பற்றிய படம் தான் அது. இந்த படத்திற்கு வருபவர்களுக்கு தான் இந்த சிறப்பு சலுகை
எல்லாம் சரிதான் ஆனால் வருபவர்கள் சொல்வது போல் அவர்கள் உண்மையிலேயே கன்னியாகத் தான் இருக்கிறார்கள் என்பதை எப்படி உறுதி செய்வார்கள் என்று தானே கேட்கிறீர்கள். அதற்கு ஒரு ஹிப்னாடிச வல்லுநரை ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அவர் படம் பார்க்க வருபவர்களின் மனதை ஆராய்ந்து அவர்கள் சொல்வது உண்மையா இல்லையா என்பதை மிக எளிதில் கண்டு பிடித்து சொல்லிவிடுவாராம்
என்னவோ போங்க

1 comments:
மை லாஸ்ட் டைம் நு எடுத்தா யாரும் இலவச டிக்கெட் வாங்க வர மாட்டங்க
Post a Comment