Sunday, June 10, 2007

சுட்டாலே சுட்டாலே

டிக்கெட் வாங்கிவிட்டு தியேட்டர் உள்ளே போய் உட்கார்ந்து படம் பார்த்தால் எனக்கு பெரிய சந்தேகம், நாம் வாங்கியது தமிழ் பட டிக்கெட் தானா அல்லது ஏதோ இந்தி படம் ஓடும் தியேட்டருக்கு வந்துவிட்டோமா என்று. வெற்றி பெற்ற சில இந்தி படங்களின் பார்முலாக்களை தமிழில் முயற்சி செய்து பார்த்து இருக்கிறார் இயக்குநர்

படத்தில் முதல் அரை மணி நேரம் இயக்குநர் இந்தி படமான "தில் சாத்தா ஹை"ல் இருந்து மானாவரியாக சுட்டு தள்ளி இருக்கிறார். காட்சிக்கு காட்சி அப்படியே காப்பி அடித்து இருக்கிறார். அப்புறம் அவுஸ்திரேலியாவை வளைத்து வளைத்து எடுத்து இருக்கிறார் இதுவும் அதே படத்தின் பாதிப்பு தான்

சரி மதியான நேரம் ஏசியில் கொஞ்ச நேரம் தூங்கி விட்டு எழுந்து பார்த்தால் "கல் ஹோ நா ஹோ" படம் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதில் வரும் ப்ரீத்தி ஜிந்தா போல் கண்ணாடி அணிந்து கொண்டு நம்ம சதா வந்து போகிறார். அதே போல் பாத்திர படைப்பு. அப்புறம் அந்த இரண்டாவது கதாநாயகி ஒரு வாரத்தில் நாயகனை கைப்பிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு "டே 1", "டே 2" என்று எல்லாமே அப்படியே "கல் ஹோ நா ஹோ" தான். ஸ்டிரிப் டீஸ் போய் விட்டு மப்பில் பேசிக் கொண்டு வீடு திரும்புவது என்று சில ஆண்டுகளுக்கு முன் பார்த்த "கல் ஹோ நா ஹோ" இந்தி படத்தை அப்படியே நினைவுபடுத்துகிறார் இயக்குநர்

முழு தூக்கமும் தூங்கிவிட்டு பார்த்தால் கிளைமாக்ஸ். "கல் ஹோ நா ஹோ"வில் நாயகன் விட்டுக்கொடுப்பார் இங்கே நாயகி விட்டுக் கொடுக்கிறார். அப்பப்போ நம்ம ஹாரிஸ் ஜெயராஜ் வந்து "நண்பா! இது தமிழ் படம் தான்" என்று ஆறுதல் அளித்துவிட்டு போகிறார். அங்கே கொஞம் இங்கே கொஞ்சம் என்று வெட்டி ஒட்டி, காப்பி பேஸ்டில் கணினி கணவான்களுக்கு கலைத்துறையினர் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்று நம்ம இயக்குநர் நிரூபித்து இருக்கிறார்

இந்த தமிழ் புத்தாண்டு அன்றே நான் திரை அரங்கின் வாசலில் தான் இருந்தேன். நம்ம சேரனின் பூதக்கண்ணாடி வராததால் இந்த படம் இருந்தும் பார்க்காமல் வந்துவிட்டேன். இவ்வளவு நாள் ஓடிக் கொண்டு இருக்கிறதே என்று போய் பார்த்தால் பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சியது

1 comments:

Anonymous said...

:-)

நண்பர்கள்

Blog Archive