சேரனின் பூதக்கண்ணாடி
'அகலக் கால் வைக்காதே மச்சி ஆழ வை' என்பது தான் படத்தின் கரு. இந்த கால இளைஞர்களுக்கு மிக தேவையான ஒரு கருத்து. நல்லதொரு கருத்தை எடுத்துக் கொண்டதற்காக சேரனை பாராட்டலாம். அகலக் கால் வைக்க நினைக்கும் படத்தின் நாயகனின் கதையை மெயின் டிராக்காகவும் ஆழக் கால் வைத்து படிப்படியாக முன்னேறும் நாயகனின் நண்பன் பசுபதியின் கதையை சைடு டிராக்காகவும் மிக அழகாக காட்டி இருக்கிறார் இயக்குநர்
என்ன தான் அழகான மூஞ்சியா இருந்தாலும் ஏன் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மூஞ்சிய கூட பூதக்கண்ணாடி வழியாக பார்த்தால் கொஞ்சம் விகாரமாகத் தானே தெரியும். அது போல இந்த கதைக் கருவும் சேரனின் பூதக்கண்ணாடி வழியாக பார்க்கும் போது கொஞ்சம் விகாரமககத் தான் தெரிகிறது. நல்ல கரு கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கையில் அடித்து ஆட முற்பட்டு இருக்கிறார் இயக்குநர். ஆனால் எல்லா பந்துகளையும் அடித்து ஆட நினைத்து பல இடங்களில் கோட்டை விட்டு இருக்கிறார். முக்கியமாக இசை. படத்திற்கு இசை இசைஞானி என்றால் நம்ப முடியவில்லை. இசைஞானி இசையில் அவரே பாடுவதை முதலில் கேட்கும் போது நன்றாக இருந்தாலும் அவரே மீண்டும் மீண்டும் வந்து பாடுவது அலுப்பை தருகிறது
சேரன் கோட்டைவிட்டுள்ள மற்றொரு இடம் திரைக்கதை. திரைக்கதை வைத்துப் பார்க்கும் போது சேரனின் படங்களை ஆட்டோகிராஃப்புக்கு முன் ஆட்டோகிராஃப்புக்கு பின் என்று பிரிக்கலாம். ஆட்டோகிராஃப்புக்கு முந்தைய சேரனின் படங்களில் எல்லாம் திரைக்கதை அந்தந்த கதைக்கு ஏற்ப இருக்கும். ஆட்டோகிராஃப் படத்திலும் அப்படியே இருந்தது. ஆனால் ஆட்டோகிராஃப் படத்தின் பெரும் வெற்றியை ருசி பார்த்துவிட்ட சேரன் அதையே வெற்றியின் ரெசிப்பியாக நினைத்துவிட்டார். அவருடைய அடுத்த படமான 'தவமாய் தவமிருந்து' அட்டோகிராஃப் அளவிற்கு வெற்றி அடையாத போதே சேரன் சுதாரித்து இருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அதே பாணியை மாயக்கண்ணாடியிலும் கடைப்பிடித்து தோல்வி அடைந்து இருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சேரன்
சேரன் என்று பெயர் வைத்து இருப்பதாலோ என்னவோ தன் படங்களுக்கு தொடர்ந்து மலையாள நடிகைகளையே அடுத்தடுத்து புக் செய்கிறார்
விரசமே இல்லாமல் படம் எடுத்ததற்காக அவருடைய படத்திற்கு வரி விலக்கு அளிக்கலாம்

10 comments:
முடி திருத்தும் தொழிலாளி படிப்படியாகத்தான் தனது தொழில் மூலமாக மட்டும்தான் முன்னேற முடியுமா?
ஒரு துப்புரவுத் தொழிலாளி தனது தொழிலில் மட்டும் திறமையைக் காட்டி நமது நாட்டில் எவ்வாறு முன்னேற முடியும்.
குறுக்கு வழி வேண்டாம்; நேர் வழிதான் சிறந்தது எனச் சொல்ல நினைத்தாரா?
ஆசையே துன்பத்திற்கு காரணம் எனப் புத்தன் மொழியா?
எந்த ஒரு மனிதனும் ஆசைப் படாமல், விடாமுயற்சி இல்லாமல் முன்னேற முடியாது. இவரது படத்தில் கார், மாளிகை என வசதியாக வாழ, 6 மாத காலம் மட்டும் முயற்சி செய்து விட்டு தோற்று ஒடும் ஒரு கதாபாத்திரம் வழியாக என்ன சொன்னாலும் எடுபடாது.
ரொம்ப லேட்டா வருது விமர்சனம்?படம் பார்க்க லேட்டா ஆச்சா?
அவரு முடியைப் பத்தி சொல்லமா போயிட்டீங்களே.rebonding சகிக்கவில்லை :-((
:-))
//
ரொம்ப லேட்டா வருது விமர்சனம்?படம் பார்க்க லேட்டா ஆச்சா?
//
சிங்கப்பூரில் இப்போது தானே CD வெளியாகி இருக்கிறது
//சிங்கப்பூரில் இப்போது தானே CD வெளியாகி இருக்கிறது
//
too bad.JB is the best.படம் வந்து ஒரு வாரத்திலெயே நான் வீட்டில் பார்த்துவிட்டேன்.ஹிஹி
//
அவரு முடியைப் பத்தி சொல்லமா போயிட்டீங்களே.rebonding சகிக்கவில்லை :-((
:-))
//
உண்மைதான் துர்கா! படத்தில் சேரனின் ஹேர்ஸ்டைல் சகிக்கவில்லை தான். படத்தின் இறுதியில் இயல்பான ஹேர்ஸ்டைலுடன் வருகிறார் சேரன். contrast காட்டுவதற்காக அவர் இதை செய்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். படத்தின் பிரமோக்களில் இயல்பான சேரனை காட்டி இருந்தால் படம் கொஞ்சம் பெட்டராக ஓடி இருக்கும்
//too bad.JB is the best.படம் வந்து ஒரு வாரத்திலெயே நான் வீட்டில் பார்த்துவிட்டேன்.ஹிஹி//
ஆஹா! கெளம்பிட்டாங்கய்யா. அடுத்த முறை புதுசா படம் பார்த்தா சொல்லுங்க
//
முடி திருத்தும் தொழிலாளி படிப்படியாகத்தான் தனது தொழில் மூலமாக மட்டும்தான் முன்னேற முடியுமா?
//
நான் முதல் வரியிலேயே சொன்ன படி 'அகலக் கால் வைக்காதே ஆழ வை' என்பது பெரியோர் அறிவுரை. இதற்கு நீங்கள் உடன்பட வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை. அதற்கான காரணங்களும் உங்களிடம் இருக்கலாம்
///படத்தின் பிரமோக்களில் இயல்பான சேரனை காட்டி இருந்தால் படம் கொஞ்சம் பெட்டராக ஓடி இருக்கும் //
ஆமா...நானே பயந்து போயிட்டேன் :-))
//ஆஹா! கெளம்பிட்டாங்கய்யா. அடுத்த முறை புதுசா படம் பார்த்தா சொல்லுங்க
//
அடுத்த முறை ஜேபி பக்கம் வந்து படத்தை திருட்டுதனமாக வாங்கி பாருங்க.ஆனா சிங்கப்பூர் உள்ளே கொண்டு போக தான் கஷ்டம் :-))
Post a Comment