Tuesday, May 08, 2007

அமெரிக்காவில் அதி வேகமாக வளரும் மதம்

என்னடா இவனும் ஆரம்பிச்சுட்டானா என்று எண்ண வேண்டாம், தங்கள் மதம் வேகமாக வளர்கிறது என்று நிரூபிக்க அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் வைக்கும் தலைப்பு இதுவாகத் தான் இருக்கும். இதில் காமெடி என்னவென்றால் சுதேசி பேசும் மேதாவிகளும் அமெரிக்கா இருக்கும் திசை நோக்கியே திரும்பி பார்ப்பார்கள். நானும் அதற்காக தான் இந்த தலைப்பு வைத்தேன் என்று எண்ணிவிடாதீர்கள். இங்கே நான் சொல்ல வருவது அமெரிக்காவின் சமீபத்திய நிலவரம். இந்த செய்தி பகுத்தறிவாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கலாம்



அமெரிக்காவில் எந்த மதத்தையும் பின்பற்றாத பகுத்தறிவாளர்கள் தான் அதிகம் ஆகிக் கொண்டே போகிறார்கள் என்பது தான் அந்த சூடான செய்தி. அமெரிக்காவில் தற்சமயம் 5 மில்லியன் பகுத்தறிவாதிகள் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் அமெரிக்க காங்கிரஸை சேர்ந்த ஒரு ஜனநாயாக கட்சி உறுப்பினர் தான் எந்த ஒரு அதீத சக்தியையும் நம்பவில்லை என்று அறிவித்ததால் இந்த பகுத்தறிவாதிகள் மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த பகுத்தறிவாதிகள் தங்கள் அரசியல் செல்வாக்கை பலப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். தற்சமயம் அமெரிக்க அரசியலில் கிறுஸ்துவர்கள் மற்றும் யூதர்கள் மிகுந்த செல்வாக்குடன் திகழ்கிறார்கள்

இந்த பகுத்தறிவாதிகள் அமெரிக்காவின் அரசாங்க விவாகாரங்களில் மதம் நுழைவதை எதிர்க்கிறார்கள். புஷ் அதிபர் ஆன பின் தன்னுடைய மத பற்றை அவர் எந்த சமயத்திலும் வெளிக்காட்ட தவறியதில்லை. அவர் மீதும் இந்த பகுத்தறிவாதிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஈராக் போர் மத ரீதியாக சித்தரிக்கபடுவது பலரின் மத நம்பிக்கை குறைந்து போக காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது

4 comments:

Anonymous said...

80 % of Japanese doesn't follow any specific religion. Same applies to Chineese also.

Anonymous said...

80 % of Japanese doesn't follow any specific religion. Same hold true for Chinese too.

Anonymous said...

in UK too majority dont follow any religion

Anonymous said...

amrika is conservative when it comes to religion but its changing now

நண்பர்கள்

Blog Archive