சிவாஜி திரைப்படமும் இளிச்சவாய் தமிழனும்
முதலிலேயே என் வாதத்தை நான் முன் வைக்கிறேன். அதனால் பல குழப்பங்கள் தவிர்க்கப்படலாம். என்னுடைய வாதம் என்னவென்றால் சிவாஜி திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் தேவை இல்லை என்பது தான். இப்போது நான மற்றவைகளுக்கு வருகிறேன். சிவாஜி வெற்றி பெறட்டும் மாபெரும் வெற்றி பெறட்டும் அதற்கு என் வாழ்த்துக்கள். ஆனால் சிவாஜியின் வெற்றியால் தமிழன் தான் ஏழையாவான்
இயக்குநர் ஷங்கர் ஒரு நல்ல இயக்குநர் என்பதில் சந்தேகம் இல்லை. அவருடைய படங்களில் சமூக அக்கறை நிறைந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவருடைய படங்களில் வரும் பிரம்மாண்டம் தேவையானதா? என்னை கேட்டல் ஷங்கர் தன்னுடைய படங்களில் பிரம்மாண்டத்தை புகுத்துகிறார் என்றே சொல்வேன். சிவாஜி படத்திற்கு பட்ஜெட் 50 கோடி என்று முதலிலேயே முடிவாகிவிட்டது. சிவாஜி கதையும் ஷங்கரின் முந்தைய படங்களை போல் பாதுகாக்கப்படாமல் வெளிவந்துவிட்டது. இப்படிப்பட்ட ஒரு கதைக்கு 50 கோடி ஆகும் என்றால் நம்ப முடியவில்லை. அதனால் தான் பிரம்மாண்டம் புகுத்தப்பட்டுள்ளது என்று சொல்கிறேன்
சரி 50 கோடி செலவழித்தால் தான் என்ன. அதனால் வரும் லாபம் அதைவிட அதிகம் தானே என்று நீங்கள் கேட்கலாம். அங்கு தான் பிரச்சினையே. இப்போது 50 கோடி பட்ஜெட் கேட்ட ஷங்கர் கண்டிப்பாக அடுத்த படத்திற்கு 100 கோடி கேட்கலாம். இப்படி அடுத்தவர் பணத்தை வாரி இறைக்கும் ஷங்கர் தன்னுடைய முதல்வன் படத்திற்கு அடக்கி தானே வாசித்தார். அவருடைய சொந்த படங்களாகிய காதல், வெயில் எல்லாமே லோ பட்ஜெட் படங்கள் தானே
சரி 50 கோடி செலவழித்தார்கள் அதை எப்படி திரும்ப எடுப்பார்கள். ஏற்கனவே ஆடியோவின் விலை மற்ற படங்களை விட அதிகம். ஹாலிவுட் படங்களை உலகில் உள்ள எல்லா நாட்டு இரசிகர்களும் பார்ப்பார்கள் அதனால் டிக்கெட் விலை கம்மியாக் வைத்தாலும் போட்ட பணத்தை எடுத்துவிடலாம். ஆனால் சிவாஜி படத்தை தமிழர்களாகிய நாம் மட்டும் தான் பார்க்கப்போகிறோம். வேண்டுமானால் மலையாளிகள், தெலுங்கர்கள் மற்றும் ஜப்பானியர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். எப்பாடி கூட்டி கழித்துப் பார்த்தாலும் டிக்கெட் விலை அதிகாமகத் தான் வைக்கப் போகிறார்கள். இவ்வளவு அதிக விலை கொடுத்து சிவாஜி படத்தை பார்க்க இளிச்சவாய் தமிழனை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன் சிவாஜியின் வெற்றியால் தமிழன் ஏழை ஆகப் போகிறான்

20 comments:
மருதநாயகம்,
இது என்ன நகைச்சுவை பதிவா?
// சிவாஜியின் வெற்றியால் தமிழன் ஏழை ஆகப் போகிறான்//
ஏழை ஆகித்தான் ஆவேன்னு அடம் பிடிக்குறவங்க மட்டும் தான் ஏழை ஆக முடியும் .அதிக விலை கொடுத்து பார்க்க தயாராயிருப்போரைத் தான் குறை சொல்ல முடியும் .வேண்டாமென்றால் தூக்கி போட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்.
நீங்களே பாருங்க .சிவாஜியை வச்சி ஏகப்பட்ட பதிவு போடுறீங்க .இதை நிப்பாட்டினாலே கட்டி எழுப்பப்படும் அதீத பிம்பத்தை குறைக்கலாம்.
மற்ற எல்லா படங்களை போலதான் சிவாஜி படமும். மக்களாகவே இஷ்டப்பட்டு பாத்தாதான் உண்டு. இதுல "தமிழன் ஏழை ஆகப் போகிறான்" அப்படிங்கறதெல்லாம் சும்மா ஒரு பொறாமையின் வெளிபாடுதான்...
என்னை பொறுத்தவரைக்கும் இப்படிதான் பார்க்கிறேன்..."தினமும் தான் சாப்பிடறோம். ஆனா ஒரு தீபாவளி பொங்கள்ன்னு வந்தா கொஞ்சம் அதிகமாத்தான் செலவு பண்ணுவோம். அது மகிழ்ச்சிதான். அது போலதான் சிவாஜியும். அதுவும் இது ரென்டு மூனு வருஷம் கழிச்சி வர தீபாவளி. பட்ஜட் கண்டிப்பா உண்டு..."
உங்க பக்கத்துக்கு traffic வரவழைப்பதற்கே இந்த யுத்தி என்பதும், இந்த பதிவில் அறிவார்ந்த விஷயம் ஏதும் இல்லை என்பதும் நான் அறிவேன். இது போல பதிவெழுதுவதில் உங்களுக்கென்ன அப்படி ஒரு அற்ப சந்தோஷம்?
நண்பரே...தமிழ் படம் இன்று உலகச் சந்தைக்குச் சென்று விட்டது.... நீங்களே குறிப்பிட்டு இருப்பது போல்...ஜப்பான், மலையாளி, கன்னடர், தெலுங்கரோடு, தென்னாப்பிரிக்கர் ( ஜூலு மொழியில் டப் செய்யப்படுகிறது), துருக்கி, அர்ஜென்டைனா போன்ற நாடுகளில் படம் அந்த அந்த நாட்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது..
உங்க வாதம் கொஞ்சம் சிறுபிள்ளைத் தனமா இருக்கிறது... மாருதி 800ம் கார் தான்.. பி.எம்.டபுள்யூவும் கார் தான்..முன்னொரு காலத்தில் நாம் மாருதியை மட்டுமே நம்பி இருந்தோம் ... இன்று மெர்சிடிஸ். பி.எம்.டபுள்யூ போன்ற வெளிநாட்டு விலையுர்ந்த கார்கள் வருவதால் அதை வாங்கி இந்தியா ஏழை நாடாகி விடும் என்று கூறுவது எப்படியோ அப்படியே சிவாஜியைப் பார்த்து தமிழன் ஏழையாவான் என்று சொல்லுவது உள்ளது..
//
உங்க பக்கத்துக்கு traffic வரவழைப்பதற்கே இந்த யுத்தி என்பதும், இந்த பதிவில் அறிவார்ந்த விஷயம் ஏதும் இல்லை என்பதும் நான் அறிவேன். இது போல பதிவெழுதுவதில் உங்களுக்கென்ன அப்படி ஒரு அற்ப சந்தோஷம்?
//
அறிவார்ந்த விஷயங்களை இங்கே வந்து தேடும் நீங்கள் ரஜினியின் படங்களில் தேடியிருந்தால் நான் இந்த பதிவு எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டேன்
சரியான லூசு நீர்..
நீர் எழுதின ப்ளாக்-கை நீரே திருப்பிப் படியும்..
http://maruthanayagam.blogspot.com/2006/12/blog-post_04.html
இதப் போடுவீர்னு நம்புறேன்!
//
உங்க வாதம் கொஞ்சம் சிறுபிள்ளைத் தனமா இருக்கிறது... மாருதி 800ம் கார் தான்.. பி.எம்.டபுள்யூவும் கார் தான்..முன்னொரு காலத்தில் நாம் மாருதியை மட்டுமே நம்பி இருந்தோம் ... இன்று மெர்சிடிஸ். பி.எம்.டபுள்யூ போன்ற வெளிநாட்டு விலையுர்ந்த கார்கள் வருவதால் அதை வாங்கி இந்தியா ஏழை நாடாகி விடும் என்று கூறுவது எப்படியோ அப்படியே சிவாஜியைப் பார்த்து தமிழன் ஏழையாவான் என்று சொல்லுவது உள்ளது..
//
தமிழன் ஏழை ஆகிவிடுவான் என்பது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டது தான் என்று ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நான் சொல்ல வந்ததை இன்னும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. பிரம்மாண்டம் என்ற பெயரில் மக்களை சுரண்டாதீர்கள் என்று தான் நான் சொல்ல வந்தேன்
//
நீங்களே பாருங்க .சிவாஜியை வச்சி ஏகப்பட்ட பதிவு போடுறீங்க .இதை நிப்பாட்டினாலே கட்டி எழுப்பப்படும் அதீத பிம்பத்தை குறைக்கலாம்
//
அதற்காக எதிர்ப்பை காட்டாமல் இருக்க முடியுமா?
டிக்கெட் எவ்வளவு அதிகமா வித்தாலும் வாங்குறான், தமிழன் ரொம்பஅஅஅஅஅ நல்லவன்
//அதற்காக எதிர்ப்பை காட்டாமல் இருக்க முடியுமா? //
So, Just now you come to know this information about sivaji.
ok leave it.
What about marudha nayagam??? (Film pa kamal odadhu), he says give me one 100 crores, I will finish that movie.
See you are seeing in the +ve side, just see the -ve side if sivaji become flop, then every tamilan will be a rich man or what?
just see the amount of risk that the producers taking? because within 2 days you will be having sivaji dvd with superb quality, you can download freely sivaji within one week....all the money spent in the songs will be able to watch daily more than 10 times in sun music.....
Dont just say like that...
They are not going to pull every thamilan to theaters...if you want to save money...wait until "Inidya tholaikatikalil muthal muraiyaaga..."
or wait for 20 30 days after that will be the same rates for sivaji, thavamai thvam irrundhu, viyabari...
சிவாஜியின் வெ(ற்)றியால் தமிழன் ஏழை ஆகப் போகிறான்.
:))))))))
//
சிவாஜியின் வெ(ற்)றியால் தமிழன் ஏழை ஆகப் போகிறான்
//
அப்படி போடு!!!
வழக்கம்போல நல்ல பதிவு மருதநாயகம்
சிவாஜி திரைப்படமும், பிழைக்க தெரிந்த வலை பதிவர்களும்.
சும்மா எத்யாவது எழுதி, சிவாஜி னு பொத்திர வேண்டியது
நல்லா இருக்கங்க
// இளிச்சவாய் தமிழனும் //
தமிழனத் திட்டும் உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்? மனசுல என்ன 'மஞ்ச துண்டு' மைனர்-னு நெனப்பா?
//இயக்குநர் ஷங்கர் ஒரு நல்ல இயக்குநர் என்பதில் சந்தேகம் இல்லை. அவருடைய படங்களில் சமூக அக்கறை நிறைந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்//
சங்கர் ஒன்றும் மெச்சும்படியான பெரிய டைரக்டர் இல்லை பார்ப்பானை தலையில் வைத்து ஆடும் அவரும் ஒரு பார்ப்பானே அதனால் தான் அந்நியனில் ரூல்ஸ் ராமானுஜம் என்ற பார்ப்பான் கேரக்டரை வைத்துள்ளார்
//நீங்களே பாருங்க .சிவாஜியை வச்சி ஏகப்பட்ட பதிவு போடுறீங்க .இதை நிப்பாட்டினாலே கட்டி எழுப்பப்படும் அதீத பிம்பத்தை குறைக்கலாம்.
//
இந்த பதிவும் எழுதப்பட்டது எதற்க்காம் , அப்படியாவது நாலுபேர் இங்கே வருவார்கள் என்றுதானே ?
//
இந்த பதிவும் எழுதப்பட்டது எதற்க்காம் , அப்படியாவது நாலுபேர் இங்கே வருவார்கள் என்றுதானே ?
//
நீங்க வந்தீங்கள்ல அதுவே பெரிய சந்தோஷம்
//தமிழனத் திட்டும் உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்? மனசுல என்ன 'மஞ்ச துண்டு' மைனர்-னு நெனப்பா?//
தோ பார்றா மனுதர்ம மைனருக்கு வர்ற கோவத்த
சிவாஜியால் ரஜினிக்கும், சங்கருக்கும் வேண்டுமானால் லாபம் இருக்குமே தவிர, தமிழனுக்கும் ஏன் ஏவிம்-க்கு கூட லாபம் இருக்காது.
சங்கர் படங்களில் பிரமாண்டங்கள் புகுத்தபடுகிறது என்பது அப்பட்டமான உண்மை. உதாரணமாக அந்நியனில் வரும் சைனீஸ் ஸ்டையில் சண்டைக்காட்சி போல கதைக்களத்திற்கு அந்நியமான நிறைய விசயங்கள் அவர் படத்தில் பார்க்கலாம். மேலும் அவர் படங்களில் வெற்றிபெற்ற படங்கள் என்று பார்த்தால் அது கொலைப்படம்(இந்தியன்,அந்நியன்,முதல்வன்) அல்லது கொள்ளைப்படமாகத்தான்(ஜென்டில்மேன்) இருக்கும். மற்ற படங்களெல்லாம் ஊத்திகிட்டதுதான். சிவாஜி எப்படி இருக்கும்? கொலைப்படமா அல்லது கொள்ளைப்படமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
பதிவு ஒரு சுவாரசியமான சிந்தனை :-)
இந்த கமெண்ட்
//சிவாஜியின் வெ(ற்)றியால் தமிழன் ஏழை ஆகப் போகிறான்.//
சூப்பர்!!!
இந்த கமெண்ட்
//அதிக விலை கொடுத்து பார்க்க தயாராயிருப்போரைத் தான் குறை சொல்ல முடியும் .வேண்டாமென்றால் தூக்கி போட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்.//
நியாயம்!!!
இந்த கமெண்ட்டில்
//..."தினமும் தான் சாப்பிடறோம். ஆனா ஒரு தீபாவளி பொங்கள்ன்னு வந்தா கொஞ்சம் அதிகமாத்தான் செலவு பண்ணுவோம். அது மகிழ்ச்சிதான். அது போலதான் சிவாஜியும். அதுவும் இது ரென்டு மூனு வருஷம் கழிச்சி வர தீபாவளி. பட்ஜட் கண்டிப்பா உண்டு..."//
பொங்கள் ?? பொங்கல் :-))
கருத்து, ஓகே !!
Post a Comment