கூகிள் தமிழில் எழுத்துப் பிழை
http://www.google.co.in/ என்ற முகவரிக்கு சென்று பின் தமிழை தேர்ந்தெடுத்தால் கூகிள் தேடலின் முகப்பு பக்கம் தமிழில் வரும். அந்தப் பக்கத்தின் மேல் வலது ஓரத்தில் "உள்ளே நுழைக" என்ற சுட்டி இருக்கும். அதனை அழுத்தினால் கூகிள் உள் நுழையும் பக்கம் வரும். அதில் மின்னஞ்சல், ரகசிய எழுத்து ஆகியவைகளை தொடர்து வரும் பொத்தானில் "உள்நுழைக" என்பதற்கு பதில் "உள்நுளைக" என்று தவறாக இருக்கிறது. ஆனால் அதே பக்கத்தில் வரும் மற்ற இடங்களில் எல்லாம் "உள்நுழைக" என்று சரியாக இருக்கிறது. உலகத்துக்கே தேடல் சேவையை வழங்கும் கூகிளுக்கு ஒரு பிழையை தேடி கொடுத்தாச்சு


2 comments:
சபாஷ்! சரியான கண்டுபிடிப்பு!!
http://groups.google.com/?hl=ta
போய்க் கொஞ்சம் சுதந்திரமாக உலவிப் பல பக்கங்களுக்குச் சென்று பாருங்கள்.. இன்னும் நிறையப் பிழைகள் இருக்கின்றன. நாம் கூட இதைத் திருத்த முயற்சியெடுக்கலாம் தான்.
Post a Comment