Thursday, April 26, 2007

இந்து-முஸ்லிம் கலப்புத் திருமணங்கள்

நாட்டில் எப்படா கலவரம் உண்டு பண்ணலாம் என்று காத்து கிடக்கும் சங்பரிவாரத்துக்கு ஒரு இந்து பெண், முஸ்லிம் இளைஞனுடன் ஒடிப் போனால் சும்மா இருப்பார்களா? சமீபத்தில் மத்திய பிரதேசம் போபாலில் அப்படி ஒரு ஜோடி ஓடிப் போக பிரச்சினை வெடித்தது. இங்கு எது சரி, எது தவறு என்பதை விட இந்த பிரச்சினையை சங்பரிவாரம் அணுகும் முறை தான் மிகவும் அபத்தமாக இருக்கிறது

இந்து பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை நாடுவதற்கு காரணமாக விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் சொல்லும் காரணத்தை கீழே மேற்கோள் காட்டியுள்ளேன் (பார்க்க: படம்). இந்து பெண்களை பாதுகாப்பதாக சொல்லித் திரிந்து கொண்டு அவர்களையே சிறுமைபடுத்தி இருக்கிறார் இந்த தலைவர். இன்னொரு பக்கம் இந்து இளைஞர்களை மணக்கும் முஸ்லிம் பெண்களும் இருக்கத் தானே செய்கிறார்கள் அதற்கு என்ன கண்றாவி காரணம் சொல்வாரோ இந்த தலைவர்?

என்னுடைய நண்பர் வட்டத்தில் இந்து கணவன்-முஸ்லிம் மனைவி தம்பதியரும் இருக்கிறார்கள், முஸ்லிம் கணவன்-இந்து மனைவி தம்பதியரும் இருக்கிறார்கள். இரு தரப்புமே நல்ல புரிந்துணர்வோடு தான் வாழ்ந்து வருகிறார்கள். என்னைக் கேட்டால் இந்த தலைவர்கள் போன்ற ஆசாமிகள் இவர்களுடைய வாழ்வில் தலையிடாத வரை இந்த கலப்புத் தம்பதியர் இந்த சமூகத்தில் எதிர்நோக்கும் ஆபத்து வேறொன்றுமில்லை


ஆதாரம் Civil Code, De Facto

2 comments:

Anonymous said...

இதற்கு எல்லாம் மாதர் அமைப்புகள் போராட்டம் நடத்த மாட்டார்களா

Anonymous said...

சாதி அடிப்படையிலேயே கூட இன்னும் கலப்பு திருமணங்கள் முழுவதுமாக அங்கீகரிக்கபடவில்லை என்பது தான் உண்மை

நண்பர்கள்

Blog Archive